தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

19 Nov 2025, 3:33 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

உதகை, நவ.19- ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் பழங்குடியின விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். உதகையில் இந்திய மண் மற்றும் நீர் வள பாது காப்பு ஆராய்ச்சி மையத்தில், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ், ‘சுகாதாரமும் நலனும்’ என்ற தலைப்பில் பழங்குடியின மக்களுக்கிடையே வருமானம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான காளான் வளர்ப்பு திறன்  மேம்பாட்டு பயிற்சி வகுப்பு புதனன்று நடைபெற்றது. மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மையத் தலைவர் விஞ்ஞானி சோமசுந்தரம் ஜெயராமன் பேசுகையில், காளான் வளர்ப்பு ஒரு நிலையான தொழில்முறை முயற்சியாக வருமானத்தை அதிகரிப்பதோடு, மனித ஊட்டச்சத்தை யும் மேம்படுத்துகிறது. காளான் கழிவு உயிர் உர மாகப் பயன்பட்டு பயிர் உற்பத்தி மற்றும் மண் ஆரோக் கியத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது, என் றார். இந்நிகழ்ச்சியில், மண் மற்றும் நீர் வள பாது காப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தேன்மொழி, விஞ் ஞானி சுதீர்குமார், உதகை வேளாண் அறிவியல் நிலை யம் தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா, உதகையிலுள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலைய நிர் வாகி பிரவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ் கனவு தமிழ் மரபு நிகழ்ச்சி

நாமக்கல், நவ.19- தமிழ்நாடு அரசின் கல்லூரி கல்வித்துறை சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு அரசின் கல்லூரி கல்வித்துறை சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவே கானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் புதனன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு வரு வாய் கோட்டாட்சியர் லெனின் தலைமை வகித்தார். விவேகானந்தா கலை மற்றும்  அறிவியல் மகளிர் கல்லூரி தேர்வாணையர் தீன தயாளன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் நோக்க உரை யாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கவிஞர் நெல்லை ஜெயந்தா கலந்து கொண்டு பேசி னார். இதில், சுமார் 1000 கல்லூரி மாணவி கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவி ஞர் ஜெயந்தாவிடம் சிறந்த கேள்விகள் கேட்ட  மாணவிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோவை, நவ.19- ஆனைமலை குப்புச்சி புதூர் பகுதியில் கால்நடைகளை அடித்துக் கொன்ற சிறுத் தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட, போத்தமடை பகுதியில் கடந்த சுமார் ஒரு மாத காலமாக ஆடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி வந்தது. இந்த சிறுத்தையை பிடிக்க அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். இதனையடுத்து வனத்துறையினர் மூன்று கூண்டுகளை வைத்தனர். இந்நிலை யில், செவ்வாயன்று இரவு அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்டி ருந்த கூண்டில் சிறுத்தை சிக்கி கொண்டது. பிடிபட்ட சிறுத்தையை, கோவை வனக்கால் நடை மருத்துவ அலுவலர் பரிசோதனை மேற் கொண்டு, பின்னர் உலாந்தி வனச்சரக வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. சிறுத்தை சிக்கியதால் தற் போது அப்பகுதி விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.