தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ‘முரசு புயல்’ தெற்கு ஆந்திராவின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

3 Nov 2026, 11:15 pm
120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ‘முரசு புயல்’ தெற்கு ஆந்திராவின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு
<p><strong>120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ‘முரசு புயல்’ தெற்கு ஆந்திராவின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு</strong></p><p>பிரகாசம் வங்கக்கடலில் உருவான ‘முரசு புயல்’ செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் அருகே பயங்கர சூறைக்காற்றுடன் கரையைக் கடந்தது. ஒரே வாரத்தில் ஆந்திராவை கரையைக் கடக்கும் 2ஆவது புயல் முரசு ஆகும். கடந்தவாரம் அர்னாப் கரையை கடந்தது.</p><p>முரசு புயல் கரையைக் கடந்தது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தெற்கு ஆந்திரா பகுதியில்செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் முரசு புயல் கரையைகடந்தது. புயல் கரையை கடந்த போது, மணிக்கு 110 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்திலும் வீசிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது” என அதில் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக முரசு புயல் ஆந்திராவின் 15 மாவட்டங்களை துவம்சம் செய்துள்ளது. கனமழை வெள்ளத்தால் 30,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை முரசு புயல்சேதப்படுத்தியுள்ளது. 132 வட்டங்களில் மக்கள் இயல்புநிலையை இழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த10,805 பேர் புயல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 11 என்டிஆர்எப் மற்றும் 13 எஸ்டிஆர்எப் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. முரசு புயல் காரணமாக, தெற்கு கடலோர ரயில்வேயின் எல்லைக்குட்பட்ட பகுதியில்ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.