தேர்தல் கட்டுப்பாட்டால் வருவாய் இழந்து தவிக்கும் சுவர் ஓவியக் கலைஞர்கள்
29 Mar 2026, 3:34 pm
<p><strong>தேர்தல் கட்டுப்பாட்டால் வருவாய் இழந்து தவிக்கும் சுவர் ஓவியக் கலைஞர்கள்</strong></p>
<p>சென்னை: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளால் தேர்தல் காலத்திலும் வேலைவாய்ப்பை முற்றிலும் இழந்து உள்ளதாக சுவர் ஓவியத் தொழில்முறை கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் வரைவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த ஓவியர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பின்னர் படிப்படி யாக வேலை வாய்ப்பை இழந்தனர். தேர்தல் நேரங்களில் கிராமப் பகுதிகளில் மட்டும் கிடைத்த சுவர் விளம்பர வாய்ப்பும் தற்போது கட்டுப்பாடுகளால் இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் கூறு கின்றனர். இதனையடுத்து புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் அரசு மன்னர் கல்லூரி சுவர்களில் ஓவியர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் வாசகங்களுடன் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியர்களின் வாழ்வாதாரம் கருதி மீண்டும் சுவர் விளம்பரத்தை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓவி யர்கள் சங்கம் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p>
