மாற்று இடம் வழங்காமல் மார்க்கெட்டை இடித்த நகராட்சி சிறுவியாபாரிகள் சாலை மறியல்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>மாற்று இடம் வழங்காமல் மார்க்கெட்டை இடித்த நகராட்சி சிறுவியாபாரிகள் சாலை மறியல்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, ஜன. 27- கள்ளக்குறிச்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் மார்க்கெட்டை இடிக்கும் நகராட்சி நிர்வா கத்தை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வியாபாரிகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித் தனர். கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் பேசி சுமுக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.</p>
