ருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க கோரி நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
12 Aug 2026, 9:40 pm

கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க கோரி நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக.12 -தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் செள.அல்லாபிச்சை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுஊழியர் சங்க விருதுநகர் மாவட்டச் செயலாளர் க.கருப்பையா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், முன்னாள் நெல்லை மாவட்டச்செயலாளர் பார்த்தசாரதி, சிவராம், நகராட்சி ஓட்டுநர் சங்க செயல் தலைவர் திருப்பதி உட்பட தோழமைஅமைப்பு சங்க நிர்வாகிகள் ஆதரித்து பேசினர். டி.என்.எம்.சி.ஓ.ஏ சங்க மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார்விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிஅலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் நிறைவுரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் மணிமாலா பாண்டியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம்மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-இன்படி பணி விதிகளால் பதவி உயர்வு கிடைக்காத நிலையை மாற்றி, உரிய திருத்தங்களை மேற்கொண்டு பதவி உயர்வை உறுதிப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புவதுடன், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.