முந்தய பக்கம்

மும்பையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

19 Jun 2026, 8:59 pm
மும்பையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மும்பையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

இந்தியாவின் மிக முக்கிய நகர மான மும்பைக்கு (மகாரா ஷ்டிரா தலைநகர்) குடிநீர் வழங்கும் 7 ஏரி களில் தற்போது 10% தண்ணீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இது அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இதனால், மும்பை மாநகராட்சி தினசரி குடிநீர் விநியோகத்தில் 10% முதல் 20% வரை வெட்டு அமல்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் பாதியில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 15 வரை மும்பையில் வழக்கமான மழையில் 2.5% மட்டுமே பெய்துள்ளது. ஒட்டுமொத்த மகாராஷ்டிராவில் 79% மழை பற்றாக்குறை நிலவுகிறது.

அதே போல ‘சோமாலி ஜெட்’ எனப் படும் ஈரப்பதமான காற்றுக்கு பதிலாக, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் மேகக் கூட்டங்கள் கலைந்து மழை பொழிவது தடுக்கப்படுகிறது. இதனால் மும்பை தண்ணீர் பஞ்சத்திற்கு நெருங்கி வரு கிறது. மும்பையைத் தொடர்ந்து மகாரா ஷ்டிராவின் மற்றொரு முக்கிய நகரமான புனேவும் இதே போன்ற கடுமையான குடி நீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என அதி காரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு இப்போதே 15% வரை தண்ணீர் விநியோகத்தைக் குறைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி யுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram