மும்பையில் ‘மொஹரம்’ ஊர்வலத்தை சீர்குலைக்க விஷ மாத்திரை விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
28 Jun 2026, 9:56 pm

மும்பையில் ‘மொஹரம்’ ஊர்வலத்தை சீர்குலைக்க விஷ மாத்திரை விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

கிய இஸ்லாமிய பண்டி கைகளில் ஒன்றான மொஹரம் ஜூன் 26 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டப்பட்டது. இந்த பண்டிகையை முன் னிட்டு பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யின் பைகுல்லா பகுதியில் ஊர் வலம் நடைபெற்றது. ஊர்வலத் தின் போது, வலி நிவாரணி மாத் திரைகள் எனக் கூறி பையாஸ் பிரேம்ஜி என்பவர் வித்தியாச மான மாத்திரையை விநியோ கித்துள்ளார். அவரிடம் மாத்திரை யை உட்கொண்ட சல்மான் என்ற நபர் சில நிமிடங்களிலேயே கடும் வயிற்று வலி, வாந்தியால் அவ திப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் சல்மான் வலி நிவாரணி மாத்திரை சாப்பிட வில்லை. அவர் எலி மருந்தை உட்கொண்டுள்ளார் என்று தெரி வித்து, கடுமையாக போராடி சல் மானின் உயிரைக் காப்பாற்றி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து எச்சரிக்கையான மும்பை காவல் துறை உடனடியாக விஷ மாத் திரை விற்ற பையாஸ் பிரேம்ஜி யை கைது செய்து அவரிடமி ருந்த மாத்திரைகளைப் பறி முதல் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட் டுள்ளது.

திடுக்கிடும் வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட நபரி டம் நடத்திய தீவிர விசாரணை யில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேம்ஜி ஆன்லைன் மூலமாக 30,000 காலி கேப்சூல்களையும் (Empty Capsules), பெயிண்ட் தொழி லின் மூலம் 50 கிலோ அளவுக்கு துத்தநாக பாஸ்பைடு (Zinc Phosphide) என்ற வீரியமிக்க எலி விஷ வேதிப்பொருளையும் வாங்கியுள்ளார். மும்பையில் தங்கியிருந்தபடி கடந்த 15 நாட்க ளாக இந்த காலி கேப்சூல்களுக் குள் எலி விஷத்தை நிரப்பி, அதனை மொஹரம் ஊர்வலத் தில் வருவோருக்கு விநியோ கிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுவரை பிரேம்ஜியிடமி ருந்து 14,900 விஷ மாத்திரை களை காவல்துறையினர் கைப் பற்றியுள்ளனர்.

தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட நப ருக்கு சர்வதேச அளவில் ஏதே னும் தொடர்புகள் உள்ளனவா மற்றும் மும்பையில் அவரோடு வேறு எவரேனும் கூட்டுச் சதி யில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் மும்பை காவல் துறை தீவிரமாக விசாரித்து வரு வதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.ஆனால் இந்துத்துவா கும்பலின் தொடர்பு இல்லாமல் இந்த சதி வேலை அரங்கேற வாய்ப்பில்லை என எதிர்க்கட்சி கள், அரசியல் வல்லுநர்கள் குற் றம்சாட்டியுள்ளனர்.