தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘இந்திய குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல’ மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு

4 Jul 2026, 8:29 pm
‘இந்திய குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல’ மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு

‘இந்திய குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல’ மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு

புதுதில்லி மகாராஷ்டிரா மாநிலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலா ளரான சயீத் அகமது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பாபர் மசூதி இடிப்பு, ஞானவாபி மசூதி விவகாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக மும்பையின் செம்பூர் பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த போ ராட்டங்களின் போது ‘பாஜக’, ‘அமித்ஷா’ ‘மோடி அரசை’எதிர்த்து போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பூர் துணை காவல் ஆணையர், சயீத் அகமதுவை 12 மாதங்கள் மும்பைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சயீத் அகமது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார்,”ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதும், அதற்கு எதிராக கோஷமிடுவதும் குடிமக்களின் அரசியல மைப்புச் சட்டப்படியான அடிப்படை உரிமையா கும். இதற்காக ஒருவரை அவரது சொந்த நகரத்திலிருந்து வெளியேற்ற முடியாது. நாட்டில் தற்போது பல வினாத்தாள் கசிவு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்கள் மீது வழக்கு போடுவீர்களா? குடிமக்கள் அனை வரும் ஒன்றிய அரசின் அடிமைகள் கிடையாது. போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை” என அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தாரின் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”மத்தியில் உள்ள மோடி-ஷா ஆட்சியில், நாட்டின் அரசிய லமைப்புச் சட்டம் மற்றும் மக்களின் அடிப்ப டை உரிமைகள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு ாள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல் எந்தளவுக்கு இயல்பாக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள, ஒரு உயர்நீதி மன்ற நீதிபதியே மிகவும் வெளிப்படையான ஒரு உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாய நிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார்,”போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; ‘பாஜக அரசு ஒழிக’ (BJP government murdabad) என்று முழக்கமிடுவது எவ்விதத்திலும் குற்றமாகாது. இந்திய குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல” என்று மிகவும் ஆணித்தரமாகத் தெரி வித்துள்ளார். அடிப்படை உரிமைகள் மீது இடை விடாத தாக்குதலைத் தொடுத்து வரும் பாஜகவின் “இரட்டை-இன்ஜின்” அரசுகளுக்கு கண்டனங்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.