தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல! மும்பை உயர்நீதிமன்றம் குட்டு

3 Jul 2026, 7:29 pm
குடிமக்கள்  ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல! மும்பை உயர்நீதிமன்றம் குட்டு
<p><strong>குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமைகள் அல்ல! மும்பை உயர்நீதிமன்றம் குட்டு</strong></p><p>மகாராஷ்டிரா மாநிலத்தின் சோசியலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில பொதுச்செயலாளரான சயீத் அகமது அப்துல் வாஹித் சவுத்ரி குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதி வேடு, பாபர் மசூதி இடிப்பு, ஞானவாபி மசூதி விவகாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக மும்பையின் செம்பூர் பகுதியில் போராட்டங்களை நடத்தினார். </p><p>இந்த போராட்டங்களின் போது ‘பாஜக ஒழிக’, ‘அமித்ஷா ஒழிக’ ‘மோடி அரசு ஒழிக’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் பொது அமை திக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பூர் துணை காவல் ஆணையர், சயீத் அகமதுவை 12 மாதங்கள் மும்பைக் குள் நுழைய தடை விதித்து உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சயீத் அகமது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார்,”ஒன்றிய அர சின் கொள்கைகளை எதிர்ப்பதும், அதற்கு எதிராக கோஷமிடுவதும் குடி மக்களின் அரசியலமைப்புச் சட்டப்படி யான அடிப்படை உரிமையாகும். இதற் காக ஒருவரை அவரது சொந்த நகரத்தி லிருந்து வெளியேற்ற முடியாது. நாட்டில் தற்போது பல தேர்வுத்தாள் கசிவு பிரச்ச னைகள் நடந்து வருகின்றன. அதற்கு எதி ராக மக்கள் போராடினால், அவர்கள் மீது வழக்கு போடுவீர்களா? குடிமக்கள் அனை வரும் ஒன்றிய அரசின் அடிமைகள் கிடை யாது. போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை” என தீர்ப்பு வழங்கியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.