முந்தய பக்கம்

மும்பையில் பருவமழை தீவிரம் போக்குவரத்து பாதிப்பு

yesterday
மும்பையில் பருவமழை தீவிரம் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் பருவமழை தீவிரம் போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலை யில், தலைநகர் மும்பையில் திங்களன்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலு டன் மற்றும் மணிக்கு 30 முதல் 40 மீட்டர் வேகத்தில் காற்றுடனும் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் சுரங்கப்பா தைகளிலும் மழை நீர் தேங்கியது. அந்தேரி, பாந்த்ரா உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி யது.

மஞ்சள் எச்சரிக்கை

இந்நிலையில், மும்பைக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை கனமழைக் கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதே போல வியாழன், வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் மழைப் பொழிவு மேலும் தீவிரமாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு அறிவிப்புக்கு இடையே மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram