மும்பையில் விநாயகர் சிலை விழுந்து 2 பேர் உயிரிழப்பு!
yesterday
<p>மும்பையில் ஊர்வலத்தின்போது விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>மும்பையின் புலேஸ்வர் பகுதியில் ஊர்வலத்தின்போது 22 அடி உயரமுள்ள விநாயகர் சிலை திடீரென சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விபத்து மரண அறிக்கை பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.</p><p>காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சிலையின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த வெல்டிங் இணைப்பு உடைந்ததால் சிலை முன்பக்கமாகச் சரிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.</p>
