தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பன்முக வித்தகன் பாரதி - முருகன், தூத்துக்குடி

10 Dec 2025, 4:08 pm
            பன்முக வித்தகன் பாரதி -  முருகன், தூத்துக்குடி
<p><strong>பன்முக வித்தகன் பாரதி</strong></p> <p>​பாரதி ஒரு கவிஞர் மட்டுமல்ல, சிறந்த சமூக சிந்தனையாளர், பத்திரிகையாளர், மற்றும் போராட்டக்காரர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். அவர் &nbsp;மூடநம்பிக்கைகளையும், சாதிய ஆச்சாரங்களையும் அடியோடு வெறுத்தவர். &ldquo;சூத்திரனுக்கு ஒரு நீதி... பார்ப்புக்கு வேறொரு நீதி என சாத்திரம் &nbsp;சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று &nbsp;சதியென்று கண்டோம்&rdquo; என்று சாதி யத்திற்கு, வர்ணாசிரமத்திற்கு எதிராகச் சண்டமாருதம் செய்தார். &ldquo;ஓராயிரம் சாதி உண்டென்ற&rdquo; வார்த்தையை ஒப்புக்கொள்ளவில்லை. &nbsp; ​சமுதாயத்தில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இல்லாமை இல்லாத நிலை &nbsp;வேண்டும் என்று பாரதி ஆசைப்பட்டார். &ldquo;உழ வுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை &nbsp;நிந்தனை செய்வோம்&rdquo; என்று உழைப்பை போற்றினார். &ldquo;தனி ஒருவனுக்கு உண வில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்&rdquo; எனக் கொதித்தெழுந்தார். ​அரசியல் சீர்திருத்தத்தை விட சமுதாயச் சீர்திருத்தமே முதலில் தேவை என்று பாரதி கருதினார். மக்கள் அறியாமை, அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும். &ldquo;தீயை அகத்தினிடை மூட்டுவோம்&rdquo; என்றும், &ldquo;ஈயைக் கருடநிலை ஏற்றுவீர்&rdquo; என்றும் மக்கள் உள்ளத்தில் புரட்சிக் கனலை மூட்டினார். &nbsp;​புராணங்களையும் தெய்வங்களையும் கட்டுக்கதைகள் என்றார். பெண்களைப் போற்றினார்; &ldquo;ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்&rdquo; என்றார். ​சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதேசி நிதியைத் திரட்டி ஆங்கிலேய நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்தபோது, தென்னகத்தவர் ஒரு இந்திய நிதி நிறுவன வங்கியைத் துவங்க வேண்டும் என்று பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். இவரின் பெரு முயற்சியால், 1907 ஆகஸ்ட் 15-இல் பதிவு செய்யப்பட்டதே இன்று இந்தியன் வங்கி என்ற பொதுத்துறை வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. அவர் கனகலிங்கம் என்ற பட்டியலின இளைஞனுக்கு பூணூல் அணிவித்தது, அவருடைய வர்ணாசிரம எதிர்ப்புச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.