திருப்பூரில் ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>திருப்பூரில் ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.28 – திருப்பூர் அமர்ஜோதி கார்டன் பகு தியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல் நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவும், அதில் மூலதன மானிய நிதியுடன், மாநகராட்சி பங்களிப்பாக ரூ.1.92 கோடி செலவிடவும் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் 39 அங்கன்வாடி மையங்களில் அஸ்பெட் டாஸ் கூரையை மாற்றி வெப்ப தடுப்பு தகடு கூரை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மாநக ராட்சி கல்வி நிதியில் செலவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெரு நாய் கணக்கெடுப்பு திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட் டுள்ளது. கோவாவை சேர்ந்த ஒரு நிறு வனம் இப்பணிகளை மேற்கொள்ளும். இதன் பிறகு தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திடம் செலவு கணக்கு காண் பித்து இந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாமன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலிபாளையம் மற்றும் நல்லூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாநகராட்சியால் கிரயம் பெறப்பட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்ய கள ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்ப தற்கு ரூ. 11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போயம்பாளையம் மாந கராட்சி பள்ளிக்கு இரு வகுப்பறை கள் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந் தது. அங்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் 14 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வுக் கூடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தால், மாநகராட்சி முடிவு செய்த அந்த இரண்டு வகுப்பறைகளை இட நெருக் கடி உள்ள நெசவாளர் காலனி மாநக ராட்சி உயர்நிலைப் பள்ளியில் கட்டு வதற்கு மாமன்றத்தில் முடிவு செய்யப் பட்டது. 28 வது வார்டு சந்திரகாவி நடுநி லைப் பள்ளியில் ரூ. 14.2 லட்சத்திற்கு சுற் றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இரவு காவலுக்கு முன்னாள் ராணுவத்தினர் கோயில் வழி பேருந்து நிலையம், கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் மாநகராட்சி, மண்டல அலுவலகங்க ளில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் 14 பேரை தினக்கூலி அடிப்படையில் நியமிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. புதிய மாநகராட்சி கட் டிடம் கட்டப்படும் இடத்தில் ஏற்கனவே பழைய அரசு மருத்துவமனை செயல் பட்டு வந்தது. அந்த மருத்துவமனைக் கான மின் கட்டணம் ரூ.12 லட்சத்து 88 ஆயிரத்து 548 மாநகராட்சி பொது நிதி யில் செலுத்தியுள்ளனர். ஆண்டிபாளையம் பள்ளி வாக்குச்சாவடி ஆண்டிபாளையம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தரைத ளம் மற்றும் இரண்டு தளங்களுடன் ஆய் வுக்கூடம் உட்பட மொத்தம் 15 வகுப்ப றைகள் கட்டுவதற்கு பள்ளிக்கல்வித் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங் கப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனி னும் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இங்கு மூன்று வாக்குச்சாவடி கள் அமைய இருப்பதால், தேர்தல் முடிந்த பின்னே பழைய கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று முடிவு செய் யப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள அங்கன்வாடி மையத்தை புதிய கட்டி டத்தில் ஒரு வகுப்பறையை பயன்ப டுத்தி கொள்ளவும் மாமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது. பல்நோக்கு விளையாட்டு மைதானம் திருப்பூர் மாநகராட்சி அமர்ஜோதி கார்டன் பகுதியில் 5.53 ஏக்கர் பரப்பள வில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கு மூலதன மானிய நிதியில் ரூபாய் 2.88 கோடியும், மாநகராட்சி பொது நிதியில் ரூ.1.92 கோடியும் செலவிட மாமன்றத்தில் அனு மதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பெரியார் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.8 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்ப டுகிறது. அதேபோல் 15 வது வார்டு அய்யன் காளிபாளையம் துவக்கப்பள் ளியில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.9 லட்சம் செலவில் கழிப்பிட வசதி ஏற்படுத் தப்படுகிறது. செவிலியர் கல்லூரிக்கு இடம் திருப்பூர் முத்தனம்பாளையம் வாய்க்கால்மேடு கோயில்வழி செல் லும் சாலையில் 3.28 ஏக்கர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு, புதிய செவிலியர் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் செவிலியர் பயிற்சி பள்ளிக்கு கல்விக்கூட கட்டிடம் மருத்துவம் சார்ந்த பட்டயப்படிப்பு விடுதி வசதி உள்ளிட் டவை இடம்பெறும். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் பழைய அரசு மருத்து வமனை கட்டிட வளாகத்தில் சித்த மருத் துவமனை செயல்பட்டு வந்தது. புதிய மாநகராட்சி கட்டிடம் அந்த இடத்தில் கட்டுவதால் சித்த மருத்துவமனையை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்து விட்டனர். எனவே மாவட்ட அரசு தலைமை சித்த மருத்துவமனை புதிய கட்டிடத்தை, தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடனுக்கு கால நீடிப்பு அம்ருத் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.1120.57 கோடி தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை கழகத்தின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி உடன் செயல்படுத்த கடந்த 2020இல் முடிவு செய்யப்பட்டது. கடன் பெறுவதற்கான காலக்கெடு ஐந்தாண் டுகள் வரை 2025 டிசம்பர் 31 வரை நீட்டிக் கப்பட்டது. எனினும் தற்போது வரை பணி நிறைவடையாத நிலையில் ரூ.126.28 கோடி கடன் பெறுவதற்கான காலக்கெடுவை 2026 ஜூன் 30 வரை நீட் டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. எரிவாயு மயானம் திருப்பூர் 5ஆவது வார்டு வாவி பாளையம் பெத்தேல் நகரில் எரிவாயு தகனமேடை கட்டப்பட்டுள்ளது. இந்த தகன அரங்கத்தை பராமரிப்பு செய்து கொள்ள பெருமாநல்லூர் ரோட்டரி சங் கத்திற்கு நிபந்தனைகளுடன் 10 ஆண்டு களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. எனினும் சடலத்தை எரியூட்ட ரூ.4500 என கட்டணம் நிர்ணயித்தி ருப்பதை மற்ற பகுதிகளைப் போல் ரூ.3 ஆயிரமாக குறைக்க வேண்டும் என வலி யுறுத்தினர். இதை பரிசீலித்து நடவ டிக்கை எடுப்பதாக மேயர் தெரிவித் தார். தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த இதுவரை தங்கம் மெமோ ரியல் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பராமரித்து மீண்டும் பிடித்த இடத்தி லேயே விடும் பணியை செய்து வருகி றது. தெருநாய் பெருக்கம் அதிகம் உள்ள நிலையில் வடக்குப் பகுதியில் பிராணி மித்ரன் என்ற தொண்டு நிறுவ னம் தற்போது இப்பணிக்கு அனும திக்கப்பட்டுள்ளது. சிக்கண்ணா கல்லூரி பகுதியில் நத் தம் புறம்போக்கில் ஐந்தாண்டுகளாக குடியிருந்து வரும் 19 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தகுதியுள்ள மேலும் இருவ ருக்கும் பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.</p>
