தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீரை கலப்பதா? கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா எச்சரிக்கை

15 Jul 2026, 9:26 pm
முல்லைப் பெரியாற்றில் கழிவுநீரை கலப்பதா?  கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா எச்சரிக்கை

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீரை கலப்பதா? கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா எச்சரிக்கை

தேனி, ஜூலை 15- முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரில் கழிவு நீர் கலப்பதை நிறுத்தாவிட்டால் தவெக சார்பில் போராட்டம் நடைபெறும் என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெக நாத் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கி யிருக்கும் தேக்கடி ஏரியில் இருந்து கால் வாய்கள் மூலம் தமிழகத்திற்கு குடிநீர் மற் றும் பாசனத்திற்காக கொண்டு செல்லப்படு கிறது. இந்நிலையில் குமுளி, அட்டப்பள் ளம், 1ம் மைல் தேக்கடி பகுதிகளின் குடி யிருப்புகளின் கழிவுநீர் மட்டுமின்றி, இப் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதி களின் கழிவறை கழிவுகளும், குப்பைகளும் சாக்கடையில் கலந்து, தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிகளுக்குள் சென்று, தமிழகத்திற்கு தண்ணீர் வரும் சுரங்க கால்வாயில் கலக்கிறது. கழிவுநீர் கலந்த சாக்கடை நீரை குடிநீராக பயன் படுத்துவதால் தமிழக பொதுமக்கள் பல் வேறு நோய்களுக்கு ஆளாவதாக குற்றச் சாட்டு எழுந்தது. ஆய்வு இதற்கிடையில் புதனன்று காலை தமி ழக அரசு அனுமதியுடன் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தேக்கடியில் உள்ள தமி ழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் அருகே தமிழகத்திற்கு தண்ணீர் வரும் சுரங்க கால்வாயில் கழிவுநீர் கலக்கும் இடத்தினை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள், கழிவுநீர் நுரை நுரையாக குடிநீரில் கலப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பத்திரி கையாளர்களை சந்தித்து பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் திறக்கும் தண்ணீர் வரும் திறவை கால்வாயில் குமுளி பஞ்சாயத்தின் மொத்த கழிவுநீரும் கலக்கிறது. இது என்னு டைய கவனத்திற்கு வந்ததால் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு நேரடியாக ஆய்வு செய்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கவ னத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உட னடியாக தமிழக அரசு கேரள அதிகாரி களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தினர். சுமார் 40 ஆண்டுகளாக நமக்கு வழங் கும் தண்ணீரில் இந்த கழிவுநீர் கலக்கப்படு கிறது. ஒரு இடத்தில் மட்டுமல்ல மூன்று, நான்கு இடங்களில் கழிவுநீர் தண்ணீரில் கலக்கிறது. இதை உடனடியாக கேரள அரசு நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கேரள மக்கள் இந்த விஷயத்தில் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இதை உடனடியாக நிறுத்த தவறும்பட்சத் தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கேரள தமிழக வெற்றிக்கழக மக்களுடன் இணைந்து போராடுவோம் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.