தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாளை முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

13 May 2026, 9:33 pm
நாளை முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

நாளை முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

தேனி, மே 13- தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநர் கிரி தரன் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர், மே 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் மேற்பார்வைக் குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவிற்கு உதவி யாக முல்லைப்பெரியாறு அணைக்கென தனி துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநர் கிரிதரன் தலைமையிலான இந்த குழுவில், தமிழக அரசின் சார்பில் பெரியாறு–வைகை வடிநிலக் கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கேரள அரசின் சார்பில் எர்ணாகுளம் மத்திய வட்ட நீர்ப்பாசன பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கோஷி மற்றும் கட்டப்பனை நீர்ப்பாசன துணைப் பிரிவு உதவி நிர்வாகப் பொறியாளர் லெவின்ஸ் பாபு ஆகியோரும் குழுவில் உள்ளனர்.

இந்த துணைக் குழுவினர் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மே 14ஆம் தேதி (வியாழக்கிழமை) முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள முல்லைக்கொடி மழைப்பொழிவு நிலையத்தை குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

தொடர்ந்து, மே 15ஆம் தேதி பெரியாறு அணையில் ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வின் போது பிரதான அணை, பேபி டேம், மண் அணை, அணை நீர்வரத்து, நீர் கசிவு, மதகுகளின் செயல்பாடு மற்றும் கேலரி பகுதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து, அதே நாள் மாலை குமுளி யில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோ சனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் வள்ளக்கடவு முதல் பெரியாறு அணை வரை உள்ள வாகனப் பாதையை சீரமைக்கும் பணிகள் குறித்து தமிழக அதிகாரிகள் கேள்வி எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.