தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மியூல் கணக்கு மோசடியும்தடுமாறும் பாதுகாப்பும்!

13 Aug 2026, 9:48 pm
மியூல் கணக்கு மோசடியும்தடுமாறும் பாதுகாப்பும்!

மியூல் கணக்கு மோசடியும்தடுமாறும் பாதுகாப்பும்!

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊடுருவியிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும். அதே டிஜிட்டல் மயமாக்கல், ஏழை எளிய மக்களையும் இளைஞர்களையும்அறியாமலேயே குற்றவாளிகளாக்கும் ‘மியூல் கணக்கு’ என்ற பேராபத்தாகஉருவெடுத்துள்ளது என்பதுதான் வேதனையான உண்மையாகும்.

‘டிஜிட்டல் அரஸ்ட்’, போலி ஆன்லைன் வர்த்தகம், வேலைவாய்ப்பு மோசடி, கிரிப்டோ முதலீடு,போலிக் கடனுதவி போன்ற வழிகளில் பொதுமக்களின் ஆசை, பயம், மனிதாபிமானம் மற்றும் அவசரத்தைப் பயன்படுத்திப் பணத்தைப் பறிக்கின்றனர். சைபர் குற்றவாளிகள் நேரடியாகத் தங்களின்பெயரில் பணத்தைப் பெறுவதில்லை.இவ்வாறு திருடிய பணத்தின் ஆதாரத்தை மறைக்கவும், காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்கவும் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளை வாடகைக்கோ கமிஷன் அடிப்படையிலோ ‘சுமை தாங்கியாக’ (Mule) பயன்படுத்துகின்றனர். இந்தப் பினாமிகணக்குகளே ‘மியூல் கணக்குகள்’ என அழைக்கப்படுகின்றன.

சட்டப்படி மொபைல் மூலமாகவோ வாட்ஸ்-அப்பிலோ கைது வாரண்ட் மற்றும் சம்மன் அனுப்பமுடியாது. ஆனால், போலி வீடியோ கால் மூலம்தொடர்புகொண்டு, “உங்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது” எனமிரட்டி லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கின்றனர். போலி செயலிகள் மூலம் பெண்களிடம்பேசுவது போல ஆசை காட்டி, வீடியோ கால்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், “இந்த வீடியோவை உன் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம்” என மிரட்டிப் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.“மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்”, “பணத்தை மாற்றி அனுப்பினால் 5 சதவீதக் கமிஷன்” என்ற ஆசைவார்த்தைகளில் பாமர மக்கள் எளிதில் சிக்குகிறார்கள். உண்மையான குற்றவாளி தப்பிவிட, கமிஷனுக்குஆசைப்பட்டவர்கள் மாட்டிக்கொள்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 32.08 லட்சத்திற்கும் அதிகமான மியூல் கணக்குகள் கண்டறியப்பட்டுமுடக்கப்பட்டுள்ளன. 15.75 லட்சம் சிம் கார்டுகளும், 5.77 லட்சம் ஐ.எம்.இ.ஐ எண்களும், 3,718 போலிசெயலிகளும் முடக்கப்பட்டுள்ளன. 32 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது,மோசடிக்காரர்களின் செயல் எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்விதிப்பதில் காட்டும் தீவிரத்தை, மோசடிகளைத் தடுப்பதில் ஒன்றிய அரசு காட்டுவதில்லை. மோசடிக் கும்பல்கள் மக்கள் மத்தியில் ஊடுருவிய அளவிற்கு, அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் கடைக்கோடி மக்களைச் சென்றடையவில்லை என்பதேநிதர்சனமாகும்.“எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது” என்ற அறியாமை, சட்டத்தின் முன் நம்மைக் காப்பாற்றாது.விழிப்போடு இருப்போம்! ஒவ்வொருவருக்கும் சொல்வோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.