மைனாரிட்டி அரசாங்கம் நடத்த சட்டத்தில் இடமுண்டு! முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து
9 May 2026, 10:48 pm

மைனாரிட்டி அரசாங்கம் நடத்த சட்டத்தில் இடமுண்டு! முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து

சென்னை, மே 9 - தமிழக வெற்றிக் கழ கத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் முதல் நாளி லேயேஅழைத் திருக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து தெரிவித்துள்ளார்.

“பெரும்பான்மையை விட பத்து இடங்கள் குறைவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.

அரசியலமைப்பு மரபு களின்படி மிகப்பெரிய கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும்.

அவர் ஆதரவைத் திரட்டி ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் நிலையான அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இது தான் நடைமுறை, கடந்த காலத்திலும் இவ் வாறே நடந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

நரசிம்ம ராவ் தலைமையிலான ஒன்றிய அரசை உதாரணமாக சுட்டிக் காட்டிய ரோத்கி, “மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வாக்களிக் காமல் இருந்தால், சிறுபான்மை அரசாங்க மும் நீண்ட காலம் செயல்பட முடியும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

சட்ட மன்றத்தின் பணியை, ஆளுநர் தானே ஏற்று 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தைக் கோருவது அரசியலமைப்பிற்கு எதிரானது.

பெரும் தேர்தலுக்குப் பிறகு மறுதேர்தல் அல்லது ஆளுநர் ஆட்சி என்பது எந்த தரப்பும் விரும்பாத விளைவு” என்றும் எச்சரித்துள்ளார்.

தவெக உச்சநீதிமன்றத்தை நாடுவதற் கான வாய்ப்பு திறந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.