இளைய தலைமுறைக்கு பண்பாட்டைக் கொண்டு சேர்ப்பது எழுத்தாளர் கடமை
20 Dec 2025, 3:38 pm
<p>புதுச்சேரி, டிச.20- முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி நகரக்குழு சார்பில் “பண்பாட்டுக் கலந்துரையாடல்” நிகழ்ச்சி லாஸ்பேட்டை விளிம்புநிலை வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தலைவர் ஹேமாவதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாள ராகப் பங்கேற்ற முனைவர் பக்தவச்சலபாரதி பேசுகையில், “சமூக அவலங்களை எடுத்துரைப்பது போலவே, பண்பாடுகள் குறித்து இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் எழுத்தாளர்களின் முக்கியப் பொறுப்பாகும்” என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் முஎகச வின் புதுச்சேரி தலைவர் தவில் விநாயகம், பாவலர் சண்முகசுந்தரம், நகரக் குழு செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் ரமேஷ்பைரவி, அண்ணாஜெகன், புதுவை பிரபா, கணேச சுப்ரமணியம் உள்ளிட்ட திரளான எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.</p>
