தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Sept 2026, 10:47 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

முதுமலை சவாரியின் போது செல்போனுக்கு தடை!

கூடலூர், செப்.2-முதுமலை புலிகள் காப்பகத்தில் சவாரி வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் செல்போன் பயன்படுத்த புதனன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, வனத்துறை வாகனம் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் சவாரி வாகனம் (Safari vehicle) மூலம் சுற்றுலா அழைத்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் யானை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளை படம்பிடித்து சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலில் படி, சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் செல்போன் மூலம் வனவிலங்குகளை படம் பிடிப்பதன் மூலம் அவற்றை அச்சுறுத்துவது, தொந்தரவுசெய்வது போன்ற செயல்களால் வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால் சவாரியின் போது செல்போன் பயன்படுத்துவதற்கு புதனன்று முதல் முதுமலையில் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் பொருட்டு, மைய வாழ்விடங்களின் சுற்றுலாமண்டலங்களில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து முதுமலையில் புதன்கிழமையன்று சபாரி சென்ற சுற்றுலாப் பயணிகளிடமிருந்து செல்போன்கள் வாங்கப்பட்டு, ஓட்டுநரிடம் ஒப்படைத்தவனத்துறையினர், சவாரி முடிவடைந்த உடன் செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறை அறிவுறுத்தினர்.

புலிக்குத்தி வீரர்: மக்கள் வழிபாடு

உடுமலை, செப்.2-திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த ஜல்லிபட்டி அருகே ஈசல் திட்டுப்பகுதியில் கால்நடைகளை காப்பாற்ற புலியுடன் போரிட்டு உயிரிழந்தவரை ‘போடி தாத்தய்யன்’ என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் இப்பகுதி நடுகல்லில், வீரர் ஒருவர் வில், அம்புடன் புலியை எதிர்த்துப் போரிடுவது போன்றும், அருகில் கால்நடைகள் இருப்பது போன்றும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு

உதகை, செப்.2-நீலகிரி மாவட்டத்தில் 2894 பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜூன் மாத தொடக்கத்திலிருந்து பள்ளி மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும் கடந்த ஆண்டைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் ”அனைத்து குழந்தைகளும் பள்ளியில்” மற்றும் ”இடைநிற்றல் இல்லாத நிலை” ஆகிய இலக்குகளை அடைவதற்காக, 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறியும் சிறப்பு கணக்கெடுப்புப் பணி கடந்த ஆக.3 ஆம் தேதி துவங்கியது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் உதவி திட்ட அலுவலர் துரை மூர்த்தி மேற்பார்வையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி தலைமையிலான குழுவினர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 2894 பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில்171 மாணவர்கள் உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அருகிலுள்ள பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளமாணவர்களை கணக்கெடுத்து, அவர்களையும் உரிய பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் தற்போது தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிடப்பில் போடப்பட்ட சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை

ஈரோடு, செப்.2-ஆண்டுக்கணக்கில் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளநிலையில் அரசும், அரசாங்கமும் தொழில் அமைதியை விரும்பவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் சுமைப்பணி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான கூலிஒப்பந்தம்கடந்த 2022 இல் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் 2025 மார்ச் இறுதியில் காலாவதியானது. ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூலி உயர்வு கோரிக்கையை எழுப்பப்பட்டது. ஜவுளி வணிகர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.சம்பிரதாயப்படி பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்உரிமையாளர்கள் கூலி உயர்வு கொடுக்க முன்வரவில்லை. உடன்பாடு ஏற்படவில்லை.

கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சட்டம் - ஒழுங்கு, தொழில் அமைதி கெடும் நிலை உருவாகும் அச்சம் எழுந்த நிலையில், காவல் துறையினர் தலையிட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

அதன்படி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முன்வராததால், மறு தேதி குறிப்பிடப்பட்டது.

ஆயினும் முன்னேற்றமில்லை. இவ்வாறு சுமைப்பணியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை 18 மாதங்களாகஇழுத்தடிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளில் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசின் கவனத்திற்கும்,அமைச்சர் போன்ற அரசாங்கத்தினர் கவனத்திற்கும் பிரச்சனை கொண்டு செல்லப்படும். அவர்கள் உரியநடவடிக்கை எடுத்து சுமூக தீர்வு காணச் செய்வர்.

ஆனால் இப்போது அது நடக்கவில்லை. இப்பிரச்சனையின் தீவிரம் குறித்து அரசாங்கத்திற்கு எந்த உணர்வும் இருப்பதாக தெரியவில்லை. அரசும் வேடிக்கை பார்க்கிறது. எனவே, தொழில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு இதே நிலையில் நீடிக்க வேண்டும் என்ற அக்கறை இவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை என்ற ஐயம் தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.