காயமடைந்த குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை
29 Jun 2026, 12:24 am
<p><strong>காயமடைந்த குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை</strong></p><p>உதகை, ஜூன் 28- முதுமலை வனப்பகுதியில் தலையில் காயத்துடன் சுற்றித்திரியும் குட்டி யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் ஏராள மான யானைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, மாயார் வனப்பகுதியில் நீர் நிலைகள் உள்ளதால் யானைக் கூட்டங்கள் அடிக்கடி சாலையில் உலா வருகின்றன. கடந்த ஒரு வாரமாக பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை ஒன்று தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், யானைக்கூட்டத்துடன் சுற்றித்திரிகிறது. இதனை அவ் வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். உடல் மெலிந்து காணப்படும் அந்த குட்டியானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள தோடு, தாய் யானையுடன் சுற்றி வருகிறது. இக்காட்சி கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குட்டியானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு வாரமாக காயப்பட்ட குட்டி யானையை கண்காணித்து வரும் வனத்துறையி னர், யானைக் கூட்டத்துடன் குட்டியானை இருப்பதால் அதனை நெருங்கவோ அல்லது சிகிச்சை அளிக்கவோ முடியாத சவாலான சூழல் இருப்பதாக தெரிவித்துள்ள னர். ஆனால் வனத்துறையினர் சரியான பணியாளர் களை கொண்டு யானை கூட்டத்தை விரட்டி உடனடியாக குட்டியானைக்கு சிகிச்சை அளித்து அதனை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>
