முந்தய பக்கம்

முதுமலையில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பு!

16 hours before
முதுமலையில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பு!

முதுமலையில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பு!

முதுமலை, ஆக. 18 -நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட குதிரைப்பாறை பகுதியில் திங்களன்று சுமார் 50 வயதுடைய பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்நிலையில், செவ்வாயன்று அலட்டிக்கோட்டைபகுதியில் பெண் யானை ஒன்றும் இறந்து கிடப்பது வனத்துறையினரின் ரோந்து பணியின் போது தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். யானையின் இறப்புக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்முடிவில், யானையின் இறப்பு தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படும் என மசினகுடி வனச்சரக அலுவலர் வி.ராஜன் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 8 அன்று ஒரு யானையும், திங்களன்று ஒரு பெண் யானையும், தற்போது மேலும் ஒரு பெண்யானையும் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram