தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதுகுளத்தூர் பேருந்து நிலைய கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்க! முதுகுளத்தூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

12 Jun 2026, 9:41 pm
முதுகுளத்தூர் பேருந்து நிலைய கடைகளில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்க!  முதுகுளத்தூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
<p><strong>முதுகுளத்தூர் பேருந்து நிலைய கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்க! முதுகுளத்தூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு</strong></p><p>இராமநாதபுரம் ஜூன்.12 இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் சட்டமன்றத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராஜகண் ணப்பன் ஏர்வாடி, சிக்கல், கடலாடி, முது குளத்தூர் பகுதியில் வாக்களித்த வாக்கா ளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக எம்எல்ஏவிடம் மனு அளிக்கப் பட்டது. இதில், மாற்றுத்திறனாளிக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் AYY வகை குடும்ப அட்டை வழங்க வேண்டும். முது குளத்தூர் பேருந்து நிலைய கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2014 சட்ட தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் வீடு தேடி ரேஷன் பொருள் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர் வி.முருகன், தாலுகா செயலாளர் ஆரோக்கிய பிரபாகரன், தாலு கா தலைவர் முனியசாமி, பொருளாளர் மயில்சாமி, தாலுகா துணைத் தலை வர்கள் ராமர், தங்கப்பாண்டி ஆகியோர் மனுவை அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.