முதுகுளத்தூர் பகுதி விவசாயத்திற்கு வைகை நீரை கொண்டு வர வேண்டும்விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை
1 hour before

முதுகுளத்தூர் பகுதி விவசாயத்திற்கு வைகை நீரை கொண்டு வர வேண்டும்விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை

இராமநாதபுரம், ஆக.21–இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் பி.கே.முருகேசன் நினைவரங் கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு என்.சண் முகையா தலைமை வகித் தார். மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வி.முருகன் தொடக்கஉரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கணேசன், எல்.ஐ.சி. லிகாய் சங்க கோட்டத் தலைவர் எஸ்.குருசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பி.அங்குதன், பொருளாளர் வி.முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகணன் நிறைவுரையாற்றினார். எம்.பரிசுத்தம் நன்றி கூறினார்.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தலைவராக எம்.பரிசுத்தம், செயலாளராக என்.சண்முகையா, பொருளாளராக ஆ.தங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், 21 பேர் கொண்ட தாலுகா குழுவும் அமைக்கப்பட்டது.தீர்மானங்கள்வைகை ஆற்று நீரை முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பருவத்தில் உரங் களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுத்து, விவசாயிகளுக்குதட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து கண்மாய் களையும் முறையாக மராமத்து செய்து பாதுகாக்க வேண்டும். கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண் டும்.விவசாயத்துக்கு தேவையான மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண் டும். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.