தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம், ஏப்.10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.255.50 லட்சத்தில் 34 நூலக மையங்களும், ரூ.209.50 லட்சத்தில் 27 நியாய விலை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.112 லட்சத்தில் 43 பள்ளிகளுக்கு நூலகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.51.94 லட்சத்தில் 26 பள்ளிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவியும், ரூ.87.59 லட்சத்தில் 9 தடுப்புச் சுவரும், ரூ.34 லட்சத்தில் 3 பள்ளி கட்டிடமும், ரூ.97.50 லட்சத்தில் 21 பேவர் பிளாக் சாலைகளும், ரூ.88.80 லட்சத்தில் 21 படித்துறைகளும், ரூ.17.18 லட்சத்தில் விஐபி செட் மற்றும் மின்பிடி கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.52.00 லட்சத்தில் 26 வழிபாட்டு வகுப்பறைகளும், ரூ.21 லட்சத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் உயர்மட்டக் குடிநீரும், ரூ.342 லட்சத்தில் 53 நிழற்குடைகளும், ரூ.14 லட்சத்தில் 4 சிமெண்ட் சாலைகளும், ரூ.43 லட்சத்தில் 6 சிறு பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.