மாநகர் போக்குவரத்துக் கழக குரோம்பேட்டை பணிமனையில்
7 May 2026, 2:30 am
<p>மாநகர் போக்குவரத்துக் கழக குரோம்பேட்டை பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிய ஏ.ரவிக்குமார் ஏப்.30 அன்று பணி நிறைவு செய்தார். அவரது பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிறன்று (மே 3) குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அசோகனிடம் தீக்கதிர், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதி, கட்சி நிதி என 20 ஆயிரம் ரூபாயை ஏ.ரவிக்குமார் வழங்கினார். இந்நிகழ்வில் சிபிஎம் இடைக்குழுச் செயலாளர் விஜயகுமார், மூத்த தொழிற்சங்க தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
