தீக்கதிர் விரைவு செய்திகள்
7 Aug 2026, 9:43 pm

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிறு, குறு நிறுவனங்கள் மசோதா விவாதம் இன்றி நிறைவேற்றம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் (MSME) தொடர்பான மசோதா விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2026’ ஆகஸ்ட் 3 அன்று மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் முழுமையாகநிறைவேறியுள்ளது.

நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பணப்பரிவர்த்தனை நடைமுறைகளை எளிதாக்குதல் மூலம் இத்துறை தற்போது எதிர்கொண்டுவரும் சவால்களுக்குத் தீர்வு காண்பதை இம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 31சதவீதமும், நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீதமும் ஏற்றுமதியில் 41 சதவீத பங்களிப்பையும் இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இப்படிப்பட்ட மிக முக்கியமான துறையில் முக்கிய பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருகின்ற இந்த மசோதா, நாடாளுமன்றக் குழுக்களின் விரிவான ஆய்வோ அல்லது முறையானவிவாதங்களோ இன்றி அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி ‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான முதலீட்டு வரம்புகளை நீக்கி, அதை ஒன்றிய அரசே அறிவிப்புமூலம் தீர்மானிக்கலாம் என மாற்றியமைப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தசட்டம் சாதகமாக அமையலாம் என்ற அச்சமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குரல்கள் ஒன்றுபட்டால் அரசு பணியும்

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மாணவர்களோடு எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் இன்று (ஆக. 8) உரையாற்ற உள்ளார். இந்நிலையில் ஆக.7 அன்று தனதுசமூகஊடகத்தில் திட்டமிட்டபடி மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நடைபெறும். ஒன்றுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது மட்டுமேஇந்த அரசு பணியும் என்றுதெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த அரசுஅமைப்பு நேர்மையற்றதாக மாறிவிட்டது என்பது ஒவ்வொரு மாணவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. மாணவர்கள்கடின உழைப்பில் எந்த குறையும் இல்லை. உங்கள் முயற்சிகளுக்கு உரியஅங்கீகாரம் அளிக்காத இந்த அமைப்பின் நோக்கத்தில்தான் தவறு இருக் கிறது எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அழுத்தத்திற்கு பணிந்தே யுபிஐ பரிமாற்றத்திற்கு கட்டணம்

ஜிஎஸ்டி துவங்கி பல வரிகள் மூலமாக ஒன்றிய பாஜக அரசு மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டுள்ளது.இந்நிலையில் யுபிஐ பரிமாற்றத்திற்கும் கட்டணம் விதிக்க மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தே பாஜக அரசு எடுத்துள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம்ரமேஷ் விமர்சித்துள்ளார்.‘வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026’ நாட்டின் யுபிஐ கட்டண அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, எந்தெந்த மின்னணு கட்டண முறைகளுக்குக் கட்டணம்விதிக்கலாம் அல்லது விலக்கு அளிக்கலாம் என்பதை அரசே அரசிதழ் அறிவிக்கை மூலம் தீர்மானிக்க அதிகாரம் கொடுக்கிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் யுபிஐ மீது கட்டணம் விதிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல்தேவையின்றி, நிர்வாக உத்தரவு மூலமே அரசே முடிவெடுக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.வர்த்தகர்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது ஏமாற்றுவேலையாகும். வர்த்தகர்களுக்கு கட்டணம் விதிக்கும் போது அவர்கள் பொருட்களின் விலையில் சேர்த்துமறைமுகமாகப் பொதுமக்களிடமே வசூலிப்பார்கள். எனவே இந்த முறையால் வாடிக்கையாளர்களே மிகஅதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

யுபிஐ என்பது ஒரு பொது டிஜிட்டல்சேவை . 2025-26 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ரூ. 2.86 லட்சம் கோடியை உபரியாக ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. அதில் ஒரு சிறிய பகுதியை ஒதுக்கி யுபிஐ கட்டமைப்பைப் பராமரிக்க முடியும் எனும்போது, பொதுமக்கள்அல்லது வணிகர்கள் மீது கட்டணத்தைச் சுமத்துவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது?அதேபோல கட்டணங்களை தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) வழிகாட்டுதல் குழு இன்னும் முடிவு செய்யவில்லைஎனக் கூறுவது சாக்குபோக்காகும். எதிர்காலக் கொள்கை மாற்றங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அரசின் அறிவிப்பை சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.பிரேசிலின் ‘பிக்ஸ்’ (Pix) எனும் இலவச டிஜிட்டல் கட்டண முறைக்கும்அமெரிக்காவிடமிருந்து இதே போன்ற எதிர்ப்புகள் வந்தன. ஆனால் பிரேசில் அரசு அதற்குப் பணியாமல் தனதுஇலவசக் கொள்கையைத் தொடர்கிறது. இந்திய அரசு ஏன் அமெரிக்க அழுத்தத் திற்கு வளைந்து கொடுக்கிறது? என ஜெய்ராம் ரமேஷ் கேள்விகளை எழுப்பியுள்ளார்.