தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எம்.ஆர்.எப். தொழிலாளர் வேலைநிறுத்தம் - தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் : பெ.சண்முகம் வலியுறுத்தல்

22 Jul 2026, 9:24 pm
எம்.ஆர்.எப். தொழிலாளர் வேலைநிறுத்தம் - தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் : பெ.சண்முகம் வலியுறுத்தல்

எம்.ஆர்.எப். தொழிலாளர் வேலைநிறுத்தம் - தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் : பெ.சண்முகம் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜூலை 22: பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரத்தில் அமைந்துள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை யில் கடந்த 20 நாட்களுக்கும் மேலா கத் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு உடனடியாகத் தலை யிட்டுச் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் வலியுறுத்தி யுள்ளார். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு அமைப்பும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

30 மாத ஊதிய உயர்வு கோரி போராட்டம்

இத்தொழிற்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 30 மாதங்களாக வழங்கப் பட வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தித் தொழி லாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜூலை 22 அன்று நடைபெற்ற தொடர் போராட்டக் களத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெ.சண்முகம், தொழிலாளர்களின் கோரிக்கை களைத் தீர்த்து வைக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையைப் போலச் செயல்படுவதாக சாடினார்.

புதிய ஆட்சி மலர்ந்தால் மக்க ளின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்ப டும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்தனர் என்றும், ஆனால் தற்போது தொழி லாளர்களின் போராட்டத்தைக் கையாளும் அரசின் அணுகுமுறை ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொழிலாளர் களுக்கு ஆதரவாகச் செயல் பட்டால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க யாரும் வரமாட்டார்கள் என்ற பழமையான வாதத்தை முன்வைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்றும், தொழிலாளர்கள் இல்லாமல் மூலதனத்தை மட்டும் வைத்துக்கொண்டு யாரும் எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் மீதான அடக்குமுறைக்குக் கண்டனம்

தில்லியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், கல்வி அமைச்சரின் ராஜினாமா கோரி யும் போராடிய பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் மீது ஒன்றிய அரசு காவல்துறையை ஏவி நடத்திய தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார். மேலும், அத்தகைய அடக்கு முறைகளைக் கண்டித்துப் போரா டும் தமிழக மாணவர்களைக் காவல்துறையைக் கொண்டு அடக்குவதும், கல்லூரி வளாக த்திற்குள் புகுந்து வலுக்கட்ட மாகக் கைது செய்வதும் கண்ட னத்திற்குரியது என்றார்.

போராடு பவர்களை யாரோ தூண்டுவதாக தமிழக கல்வி அமைச்சர் கூறு வதைக் கண்டித்த அவர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சுயமரி யாதையுடன் தங்களின் உரிமை க்காகத்தான் போராடுகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும் என்றார்.

இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்ப டை உரிமையான போராட்டக் களத்தை முடக்க நினைத்தால், அது கடந்த கால ஆட்சிகளைப் போலவே கடுமையான விளைவு களைச் சந்திக்க நேரிடும் என்றும், தமிழக அரசு உடனடியாக ஒரு சிறப்புக் குழுவை அமைத்து எம்.ஆர்.எப். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தொழி லாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் எச்சரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆதரவோடு இயங்கும் இந்த அரசு ஏழை எளியவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதர வான அரசாங்கமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் பெ.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்க நாதன் உள்ளிட்ட தோழர்களும், 500-க்கும் மேற்பட்ட எம்.ஆர்.எப். தொழிற்சாலைத் தொழிலாளர்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர். (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.