எம்ஆர்எப் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
20 Jul 2026, 9:59 pm
<p><strong>எம்ஆர்எப் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு</strong></p><p>பெரம்பலூர், ஜூலை 20 - பெரம்பலூர் மாவட்டம், விஜய கோபாலபுரத்தில் அமைந்துள்ள எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழி லாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை யும் தொழிற்சாலைக்கு முன்பு உள்ள மரத்தடி பகுதியில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பெ. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
