தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா; விரைவில் தவெக-வில் இணைகிறார்?

1 hour before
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா; விரைவில் தவெக-வில் இணைகிறார்?
<p><strong>அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா; விரைவில் தவெக-வில் இணைகிறார்? </strong></p><p> ​​​​​​​சென்னை, ஜூன் 29 - சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுகவின் மற்றுமொரு முன்னாள் அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், திங்களன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து, தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். அந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும், எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உடனடியாக அறிவித்துள்ளார். “சட்டமன்றப் பேரவை விதி 21-ன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்து உள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்ட மன்றப் பேரவை விதி 22-ன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள் ளார். இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 47-இல் இருந்து 41 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலை மையில், வியாழக்கிழமையன்று தங்கள் ஆதரவாளர்களு டன் தவெக-வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை முதல மைச்சர் விஜய் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்ட நிலை யில், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.