தொழில் துறையினருடன் எம்.பி.க்கள் ஆலோசனை
8 Jan 2026, 2:44 pm
<p><strong>தொழில் துறையினருடன் எம்.பி.க்கள் ஆலோசனை</strong></p>
<p>கோவை, ஜன.8- நாடாளுமன்ற நிலைக்குழு கோவையில் வியாழனன்று தொழில்முனைவோர்களை சந் தித்து கலந்துரையாடினர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா மீதான இறக்குமதி வரியை 50 சதவீ தமாக உயர்த்தினார். இந்த அதிரடி வரி விதிப்பு காரணமாக இந்தியத் தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த வரி விதிப் பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற் றும் இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக உறவு குறித்து ஆய்வு செய்ய மாநிலங்களவை உறுப்பினர் தோலா சென் தலைமையில் 16 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 6 ஆம் தேதி முதல் விசாகப்பட்டினம் மற் றும் சென்னையில் தொழில் துறை யினரைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து வியாழனன்று கோவை வந்தடைந்த குழுவினர், ஜவுளித்துறை மற்றும் இதர தொழில் முனைவோருடன் கலந்து ரையாடுகின்றனர். முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் தோலா சென் கூறியதாவது, அமெரிக்காவின் வரி விதிப்பால் தொழில்துறையினருக்கு ஏற்பட் டுள்ள பாதிப்புகள், டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அது சார்ந்த பிரச் சனைகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தார். சென்னையில் ஆட்டோமொபைல் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் நிலவும் பிரச்சனைகளை கேட்ட றிந்ததாகவும், கோவையில் ஜவு ளித்துறையில் உள்ள சவால்கள் குறித்து கேட்டறிய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற் றும் தமிழக அரசு அதிகாரிகளு டனும் ஆலோசனை நடத்தி, அதற் கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய் யப்படும் என்றும் அவர் தெரிவித் தார்.</p>
