தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உரிமைகளுக்காக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம்: சிவதாசன் எம்.பி. கீழ்வெண்மணித் தியாகிகளின் உணர்வே எதிர்கால இயக்கங்களுக்கு ஒளிவிளக்கு

27 Oct 2026, 9:47 pm
உரிமைகளுக்காக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம்: சிவதாசன் எம்.பி. கீழ்வெண்மணித் தியாகிகளின் உணர்வே எதிர்கால இயக்கங்களுக்கு ஒளிவிளக்கு

உரிமைகளுக்காக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம்: சிவதாசன் எம்.பி. கீழ்வெண்மணித் தியாகிகளின் உணர்வே எதிர்கால இயக்கங்களுக்கு ஒளிவிளக்கு

சேலம், அக்.27-தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர் இயக்கத்துக்குப் பெருமைமிகு போராட்ட வரலாறு உள்ளது; கீழ்வெண்மணித் தியாகிகளின் போராட்ட உணர்வே எதிர்கால இயக்கங்களுக்கு ஒளிவிளக்காக அமைந்துள்ளது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் டாக்டர்.சிவதாசன் எம்.பி. தெரிவித்தார்.எடப்பாடியில் சங்கத்தின் 11 வது மாநில மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய அவர், சாதி, நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக உயிர்நீத்த கீழ்வெண்மணித் தியாகிகளின் தியாகம், இன்றைய தலைமுறைக்கும் போராட்டப் பாதையைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

நிலம், வேலை, சம கூலி

நிலமற்றோருக்கு நிலம், வேலையற்றோருக்கு வேலை, நியாயமான கூலி, சம வேலைக்குச் சம கூலி, வீட்டு வசதி ஆகியவற்றைக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர் என்றார். பெண் தொழிலாளர்கள் ஆண்களுக்கு நிகராக உழைத்தும், ‘சம வேலைக்குச் சம கூலி’ என்றஅவர்களின் நியாயமான கோரிக்கையை ஒன்றிய அரசு புறக்கணித்துவிட்டு, பெருநிறுவனங்களின் நலன்களுக்கேதொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம்சாட்டினார். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், வேலைநாட்களும் கூலியும்குறைக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார்.நிலம், வேலை, கல்வி, மருத்துவம், சமூக நீதி ஆகிய அடிப்படை உரிமைகளுக்காக விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, செங்கொடியின் கீழ் தொடர்ந்து போராட வேண்டிய காலகட்டம் இது என்றார். உற்பத்திப் பணியில் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழிலாளர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படாத நிலையில், அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வலுவான அமைப்பும் விடாத போராட்டமும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

வாக்குரிமைப் பறிப்பு ஆபத்தானது

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மூலம் பெருமளவில் பெயர்கள் நீக்கப்படுவது ஜனநாயக உரிமைகளுக்கே ஆபத்தானது எனக் கூறிய சிவதாசன், வேலை தேடிப் பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயரும் விவசாயத் தொழிலாளர்களும், ஏழை எளிய மக்களும் இதனால் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். எந்தஒரு தகுதியான வாக்காளரின் பெயரும் நீக்கப்படக் கூடாது எனவும், தேர்தல் ஆணையம் எந்த அரசியல் அழுத்தத்துக்கும் அடிபணியாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாரதியின் வரிகள் முன்னிறுத்தி

மகாகவி பாரதியாரின் “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற வரிகளை மேற்கோள் காட்டிய அவர், அன்று சுமார் 30 கோடி மக்கள் என்று குறிப்பிட்ட பாரதி, இன்று இருந்திருந்தால் 140 கோடி இந்தியர்களுக்கும் சம உரிமையும் உணவும் கிடைக்க வேண்டும் என்றே வலியுறுத்தியிருப்பார் என்றார்.

உற்பத்தியில் பெரும் பங்காற்றும் விவசாயத் தொழிலாளர்களே இன்னமும் பட்டினியிலும் வறுமையிலும் தவிக்கும் முரண்நிலையை அவர் சுட்டிக்காட்டினார். பிரேசிலில் இடதுசாரித் தலைவர் லூலாவின் வெற்றியைப் போல, உலகின் பல்வேறு பகுதிகளில் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற்று வருவதையும் எடுத்துரைத்த சிவதாசன், மோடி–அமித் ஷா கூட்டணியின் மதப் பிரிவினைவாத அரசியலை முறியடித்து, “நாம் தனிமையில் இல்லை; ஒன்றிணைந்து போராடிச் சுரண்டலற்ற புதிய சமூகத்தைப் படைப்போம்” எனப் பேரணியில் அழைப்பு விடுத்தார். நிலமற்றோருக்கு நிலம், சம வேலைக்குச் சம கூலி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதையும் அவர் எடுத்துரைத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.