விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏன்? தாராபுரத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி கேள்வி
27 Sept 2026, 8:45 pm

விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏன்? தாராபுரத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி கேள்வி

தாராபுரம், செப். 27 –தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி. லட்சுமணனை ஆதரித்து, இடதுசாரி தலைவர்கள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தில்மக்களின் உண்மையான குரலாக இடதுசாரி உறுப்பினர்கள் மட்டுமே செயலாற்றி வருவதாகத் தலைவர்கள் தெரிவித்தனர்.

எல்.ஐ.சி. அலுவலகம், காமராஜபுரம், இடையன்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று நடைபெற்ற இப்புரட்சிகரப் பிரச்சாரக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் திண்டுக்கல் மக்களவை உறுப்பினருமான ஆர். சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.

சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் ஆக்கப்பூர்வமான பங்குஇக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் சிறப்புரையாற்றுகையில், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற் காகவே இடதுசாரி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைந்துள்ளதாகவும், சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினை

களை மட்டுமே இடதுசாரி உறுப்பினர்கள் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார். பிற கட்சிகள் தங்களுக்குள் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுவரும் வேளையில், சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கான குரலாக மாற்றித் தீவிரமாகச் செயல்படும் ஒரே இயக்கம் இடதுசாரிகள்தான் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

வறட்சியும் விவசாயிகளின் கோரிக்கைகளும்தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், தாராபுரம் பகுதியில் பிஏபி மற்றும் அமராவதி பாசனத் திட்டங்களின் குறைபாடுகளைச் சரிசெய்ய அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதியான விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்று கூறும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வாங்குவதற்கு மட்டும் எப்படிப் பணம் வழங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பினார். மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாகச் செலவழிக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிரச்சாரத்தின் இறுதியில், தாராபுரம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கா கவும் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் பி. லட்சுமணனுக்கு ‘கதிர் அரிவாள்’ சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.