இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்
13 May 2026, 9:40 pm

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்

திண்டுக்கல், மே 13- இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரையும் உடனடி யாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என திண் டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் எம்.பி. ஒன்றிய அரசை வலி யுறுத்தியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் தெற்கு கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீர் கொழும்பு அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டு, பின்னர் கொழும்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மண்டபத்தைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணிராஜன், ஆல்பிரட், அலெக்ஸ், அருள்பிரட்டோ மற்றும் ஷானு ஆகிய 6 மீனவர்கள் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கட்டுப்பாட்டை இழந்து இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எந்தவித விசாரணையும் இன்றி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஒன்றிய அரசு உடனடியாக தலை யிட்டு மீனவர்கள் 6 பேரையும் பாது காப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.