தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆர்.சச்சிதானந்தம் திறந்து வைத்தார்

13 Jun 2026, 10:23 pm
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆர்.சச்சிதானந்தம் திறந்து வைத்தார்

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆர்.சச்சிதானந்தம் திறந்து வைத்தார்

சின்னாளப்பட்டி, ஜூன் 13- திண்டுக்கல் மாவட்டம், வத்த லக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்காபட்டி ஊராட்சியின் செம்மேட்டுப்பட்டியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், எழுவனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உச்சப் பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தையும் ஆர்.சச்சி தானந்தம் எம்.பி. திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் தா.அஜய்கோஷ், கே.பாலாஜி, ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின் ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.பெருமாள்சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.ராமசாமி, கிளைச் செயலாளர் ஏ.சக்திவேல், கட்சி நிர்வாகிகள், கிளைத் தோழர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.