பாலசமுத்திரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆறுதல்
14 Jun 2026, 11:42 pm
<p><strong>பாலசமுத்திரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆறுதல்</strong></p><p>பழனி, ஜூன் 14- திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியின் 12-வது வார்டில் வசித்து வரும் ரெங்கசாமியின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குடும்பத்தின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் உள்ளிட்ட குடும்பத்தினரை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், குடும்பத்தினரின் நிலையை கேட்டறிந்த அவர், தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின்போது, பழனி நகர் மன்ற முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன், கிளைச் செயலாளர் கணேசன் மற்றும் ஊர் முக்கி யஸ்தர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வலியு றுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத் தினர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு உடனடி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
