தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டது பழனி - ஒன்றிய பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகளை ஆர். சச்சிதானந்தம் எம்.பி., திறந்து வைத்தார்
19 Jun 2026, 10:11 pm

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டது பழனி - ஒன்றிய பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகளை ஆர். சச்சிதானந்தம் எம்.பி., திறந்து வைத்தார்

பழனி, ஜூன் 19- நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் பழனி மற்றும் பழனி ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகளை ஆர். சச்சிதானந்தம் எம்.பி., திறந்து வைத்தார்.

பழனி நகராட்சி 19 ஆவது வார்டில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆர். உமா மகேஸ்வரி, நகர்மன்ற ஆணையாளர் டிட்டோ, துணைத்தலைவர் கே. கந்தசாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆ. வேலுமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் பி. காளீஸ்வரி பாஸ்கரன், முருகேசன், சிபிஎம் நகரக் குழு உறுப்பினர்கள் பிச்சைமுத்து, சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் பேசுகையில் , “பழனி கோவில் மற்றும் சுற்றுலா நகரமாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ரூ.20 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழனி ரயில் நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. தினமும் சுமார் 2,000 பயணிகள் ரயில் மூலம் பழனிக்கு வருகை தருகின்றனர். நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பழனி ஊராட்சி ஒன்றியம் கரடிக்கூட்டம் ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் மற்றும் அக்கமநாயக்கன்புதூர், பாப்பம்பட்டி ஊராட்சியில் நிறுவப்பட்ட சோலார் மின்விளக்குகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் கௌரி, பழனி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோப்பணன், ஆறுமுகம், மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.