ம.பி: மெட்ரோ ரயில்களில் திருமண கொண்டாட்டங்களுக்கு அனுமதி!
7 May 2026, 6:45 pm

மத்தியப் பிரதேசத்தில் மெட்ரோ ரயில்களில் திருமண கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால், இந்தூர் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வருவாய் இல்லாததால், அந்த ரயில்களில் 50 பேர் மட்டும் பங்கேற்கக்கூடிய பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5000மும், ஓடும் ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.7000மும் நிகழ்வு கட்டணமாக வசூலிக்கவும், முன்பதிவு செய்ய ஒரு பெட்டிக்கு பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.20,000 வசூலிக்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.