முந்தய பக்கம்

தந்தை தீர்ப்பு தருகிறார்... மகனுக்குப் பதவி கிடைக்கிறது!

27 May 2026, 8:48 pm
தந்தை தீர்ப்பு தருகிறார்... மகனுக்குப் பதவி கிடைக்கிறது!

தந்தை தீர்ப்பு தருகிறார்... மகனுக்குப் பதவி கிடைக்கிறது!

மத்தியப் பிரதேசத்தின் ‘தர்’ பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை “போஜ்சாலா சரஸ்வதி கோவில்” என்று தீர்ப்பளித்து, 1991 வழி பாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது அம்மாநில உயர்நீதிமன்ற அமர்வு.

இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி விஜய் குமார் சுக்லாவின் மகன் சுஜய் சுக்லா, தீர்ப்பு வந்த அதே நாளில் அரசு வழக்கறிஞர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்!

மேலும், மசூதிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த தொல்லியல் துறை வழக்கறி ஞர் சுனில் ஜெயினின் உதவியாள ராக இருந்தவர்தான் இந்த சுஜய் சுக்லா.

மகன் வேலை செய்த தரப்பு அறிக்கை கொடுக்கிறது, அதை வைத்து அப்பா தீர்ப்பு எழு துகிறார், மாலையில் மகனுக்கு அரசுப் பதவி கிடைக்கிறது!

ஆர்.எஸ்.எஸ் வழி ஆட்சி யில் நீதித்துறை எப்படி வளைக்கப்படுகிறது என்ப தற்கும், அதற்கு வளைந்து கொடுப்பவர்கள் எப்படிப் பலன் பெறுகிறார்கள் என்பதற்கும் இதைவிடச் சிறந்த ‘ஜனநாயக’ உதாரணம் தேவையில்லை.

Share
FacebookXWhatsAppTelegram