தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போஜ்சாலா வளாகம் கோவிலாம் : ம.பி. உயர்நீதிமன்றம் தீர்ப்பு

17 May 2026, 9:29 pm
போஜ்சாலா வளாகம் கோவிலாம் : ம.பி. உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போஜ்சாலா வளாகம் கோவிலாம் : ம.பி. உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உடனே கைப்பற்றிய இந்துத்துவா அமைப்புகள் இந்தூர் / புதுதில்லி | மே 16, மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத் தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போஜ்சாலா வளாகம் மற்றும் கமால் மௌலா மசூதி அமைந்துள்ள இடம், வாக்தேவி (சரஸ்வதி) தேவிக்காக அர்ப்ப ணிக்கப்பட்ட ஒரு 11 ஆம் நூற்றாண்டு கோவிலே என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள் ளது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, சனிக்கிழமை அன்று அங்கு பலத்த பாதுகாப்புடன் இந்துத்துவா அமைப்புகள் பூஜைகளைத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, இந்தத் தீர்ப்பு நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக அடித்தளங்களுக்குப் பெரும் அச்சுறுத்த லாக அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இதன் காரணமாக வகுப்புவாதப் பிரிவினைகள் மேலும் ஆழமடையக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சமான தீர்ப்பு இவ்விவகாரத்தில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு நீதிபதிகள் வினய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 242 பக்கங்கள் கொண்ட மிக விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

முஸ்லிம் மற்றும் சமண சமூகத்தினர் தாக்கல் செய்திருந்த மனுக்களைத் தள்ளு படி செய்த நீதிமன்றம், இந்த “சர்ச்சைக் குரிய வளாகம்” ஒரு கோவிலே என்று கூறியது.

நீதிமன்றம் தனது உத்தரவில், கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை பிறப்பித்திருந்த உத்தரவை முழுமையாக ரத்து செய்துள்ளது.

அந்த பழைய உத்தரவின்படி, முஸ்லிம் சமூகத்தி னர் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தவும், இந்துக்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வசந்த பஞ்சமி நாட்களில் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 1935 ஆம் ஆண்டு தார் சமஸ்தானம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பிரகடனம் (அயிலான்) மூலம் இப்பகுதி மசூதியாக அறிவிக்கப்பட்டது என்ற முஸ்லிம் தரப்பின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அந்தச் சட்டம் ஏப்ரல் 1937 இல் தான் நடைமுறைக்கு வந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பாபர் மசூதி - ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் 10 முக்கியக் கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்த முடிவிற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த வளாகத்தில் கார்பன் டேட்டிங் மற்றும் எக்ஸ்-ரேஃப்ளோரசன்ஸ் (XRF) ஸ்பாட் பகுப்பாய்வு உள்ளிட்ட அறிவியல் பூர்வ ஆய்வுகளை மேற் கொண்டு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த அறிவியல் ஆய்வு கள் அனைத்தும் இது ஒரு 11 ஆம் நூற்றாண்டு கோவில் என்ற முடிவையே உறுதிப்படுத்துகின்றன என்றும்; அதே நேரத்தில், முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தார் மாவட்டத்தில் மசூதி கட்டுவதற்குப் பொருத்தமான மாற்று நிலத்தை வழங்கு வது குறித்து மாநில அரசு பரிசீலிக்கலாம் என்றும் ; 1800களின் இறுதியில் லண்டன் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி தேவியின் சிலையை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து இங்கு மறுபிரதிஷ்டை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்காகவே இந்துத்துவா அமைப்புகள் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்த நாளான சனிக்கிழமை, போஜ்சாலா வளாகத்தில் இந்து முன்னணி மற்றும் போஜ் உத்சவ் சமிதியைச் சேர்ந்த அமைப்புகள் உள்ளூர் மக்களைத் திரட்டி சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

இதை யொட்டி தார் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்தும் வகையில், இந்திய தொல்லியல் துறையின் இயக்குநர் ஏ.எம்.வி. சுப்பிர மணியம் புதிய வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்து சமூ கத்தினருக்கு இந்த போஜ்சாலா வளாகத்திற் குள் எவ்வித கட்டுப்பாடுகளும் அற்ற முழு மையான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில், 1958 ஆம் ஆண்டின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் (AMASR) சட்டத்தின் கீழ் இந்த வளாகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னப் பகுதியாகவே நீடிக்கும் என்ப தால், அதன் கட்டமைப்புப் பாதுகாப்பினை தொல்லியல் துறை முழுமையாகக் கண்கா ணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்தத் தீர்ப்பு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது என்றும், இதனை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் மௌலானா கமாலுத்தீன் வெல்ஃபேர் சொசைட்டியின் தலைவர் அப்துல் சமது தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பில் எங்குமே நமாஸ் செய்வதை நிறுத்த வேண்டும் என்றோ அல்லது தினசரி பூஜை களைத் தொடங்க வேண்டும் என்றோ கூறப்படாத நிலையில் தொல்லியல் துறை விதிகளை மீறிச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தர வும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக இந்துத்துவா அமைப்புகள் தரப்பில் ‘கேவி யட்’ மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது: சிபிஎம் விமர்சனம்

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் போஜ்சாலா-கமால் மௌலா மசூதி விவகாரத்தில் அளித்துள்ள தீர்ப்பு குறித்தும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக அடித்தளங்களில் அது ஏற்படுத்தக்கூடிய பரந்த தாக்கங்கள் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.

இவ்வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவ தற்கு அனுமதி அளித்த இந்திய தொல்லியல் துறையின் உத்தரவை ரத்து செய்துள்ள இந்தத் தீர்ப்பு, பாபர் மசூதி-ராமஜென்ம பூமி உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் முன் வைத்த அதே வாதங்களை எதிரொலிப்பதாக உள்ளது.

மேலும், இது போன்ற பிற சர்ச்சைகளிலும் இந்தத் தீர்ப்பு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.

வரலாற்று மற்றும் மத ரீதியிலான சர்ச்சைகள் மீண்டும் மீண்டும் கிளப்பப்பட்டு, வகுப்புவாதப் பிரிவினையை ஆழப்படுத்தும் வகையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வரும் தற்போதைய அதிகரித்து வரும் போக்கிலிருந்து இந்தத் தீர்ப்பைத் தனித்துப் பார்க்க முடியாது.

வழிபாட்டுத் தலங்கள் மீதான முடிவற்ற வகுப்புவாத மோதல்களைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள இந்தத் தீர்ப்பு மறுப்பதாகத் தோன்று கிறது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இச்சட்டத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணான தாக அமைந்துள்ளது.

மக்களின் அவசரத் தேவைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி, பிரிவினையை உண்டாக்கும் மதப் பிரச்சினைகளைத் தொடர்ந்து முன்னிறுத்த முயலும் பாஜாக-ஆர்எஸ்எஸ் கூட்டணி போன்ற மதவெறி சக்தி களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு துணை புரியும்.

இத்தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்படும் மேல்முறை யீடுகளை விசாரணை செய்யவுள்ள உச்ச நீதிமன்றம், இதனை ரத்து செய்யும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நம்புகிறது.

அனைத்து வடிவங்களிலான வகுப்புவாதமும் தேசிய ஒற்றுமைக்கும் ஜனநாயக வாழ்விற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குதால், அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை நீதித்துறை நிலைநிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

மத ரீதியாக மக்களைப் பிரிக்க முயலும் முயற்சிகளை எதிர்த்து முறியடிக்குமாறும், வாழ்வாதாரம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை வலுப்படுத்துமாறும் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.