தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறக்கும் ம.பி., பாஜக முதலமைச்சர் 2 ஆண்டுகளில் 168 ஏக்கர் நிலத்தை சுருட்டிய மோகன் யாதவின் குடும்பம்

23 Jun 2026, 9:09 pm
ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறக்கும் ம.பி., பாஜக முதலமைச்சர் 2 ஆண்டுகளில் 168 ஏக்கர் நிலத்தை சுருட்டிய மோகன் யாதவின் குடும்பம்

ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறக்கும் ம.பி., பாஜக முதலமைச்சர் 2 ஆண்டுகளில் 168 ஏக்கர் நிலத்தை சுருட்டிய மோகன் யாதவின் குடும்பம்

பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநி லத்தின் முதல மைச்சராக இருப்பவர் மோகன் யாதவ். இவர் பிரதமர் மோடி - அமித் ஷாவுக்கு மிக நெருக்கமானவர். 2023 டிசம்பர் மாதம் முதல் மோகன் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், நாட்டின் மிக முக்கிய ரியல் எஸ்டேட் சந்தையாக உருவெடுத்து வரும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான உஜ்ஜைனியில் முதலமைச்சர் மோகன் யாதவும், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ரூ.45 கோடி மதிப்பிலான, 168 ஏக்கர் பரப்பளவிலான 137 நிலப்பகுதிகளை (பிளாட்) வாங்கியுள்ளனர். அதுவும் முதலமைச்சரான வெறும் இரண்டே ஆண்டுகளில், 168 ஏக்கர் பரப்பளவு விவசாயிகள், அப்பாவி பொதுமக்க ளிடம் வாரி சுருட்டப்பட்டுள்ளது.

ரூ.100 கோடியை தாண்டும்

மோகன் யாதவ் பதவியேற்றது முதல் 2025 டிசம்பர் இறுதி வரையி லான நிலப்பதிவேடுகளை ஆய்வு செய்த போது, உஜ்ஜைனியின் ஒட்டு மொத்த ரியல் எஸ்டேட் துறையையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது அம்பலமாகி யுள்ளது. 2 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 168 ஏக்கரில், 12 ஏக்கர் நிலம் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே உள் மாற்றம் செய்யப்பட்டவையாகும். எஞ்சிய நிலங்கள் அனைத்தும் வெளி நபர்களிடமிருந்து வாங்கப் பட்டுள்ளன. இதில் ஆறு நிலங்கள் லாபத்திற்கு விற்கப்பட்டதாகவும் பதிவுகள் காட்டுகின்றன. இன்னும் 2026ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நிலப் பரிவர்த்தனைகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. அவற்றை கணக்கிட்டால் ரூ.100 கோடியை தாண்டும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சராக இருந்த போதே...

மோகன் யாதவ் முதலமைச்சரா வதற்கு முன்பு 2021-2023 கால கட்டத்தில் அவர் மாநில கல்வி அமைச்சராக இருந்தார். அப்போதே அவரது குடும்பத்தினர் 179 ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கியிருந்தனர். ஆனால், அவர் முதலமைச்சரான பிறகு இந்த நிலக்குவிப்பு வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, உஜ்ஜைனியில் கும்ப மேளா உள்கட்டமைப்புக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை அரசு கையகப்படுத்தியதால் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2025ஆம் ஆண்டிலேயே, மோகன் யாதவின் குடும்பத்தினர் 92 ஏக்கர் பரப்பளவிலான 62 நிலங்களை வாங்கியுள்ளனர்.

அரசு திட்டங்களுக்கு அருகே...

மோகன் யாதவ் குடும்பத்தினர் 2023ஆம் ஆண்டு முதல் வாங்கிய 168 ஏக்கரில், சுமார் 111 ஏக்கர் நிலங்கள் உஜ்ஜைனியைச் சுற்றி அறிவித்த முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன. உஜ்ஜைனி, இந்தூர், போபால், நாக்தா, பத்நாவர், ஜாலாவார் மற்றும் கரோத் ஆகிய நகரங்களை இணைக்கும் 8 முக்கிய நெடுஞ்சா லைத் திட்டங்களும், 15-20 உட்புற சாலை விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வரும் இடங்கள், உஜ்ஜைனி- பத்நாகர், உஜ்ஜைனி-இந்தூர் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்க ளில் 51 ஏக்கர் நிலத்தை முதல மைச்சரின் குடும்பம் வாங்கியுள்ளது.

நான்கு வழிச்சாலையாக மாற்றப் பட்டு வரும் உஜ்ஜைனி-மாக்ஸி சாலை யின் தெற்குப் பகுதியில் 6 ஏக்கர் நிலம் (12 பிளாட்டுகள்) வாங்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலைக்கு அருகே நிலம் வாங்கி விற்றால், பின்னாளில் அதிக விலைக்கு போகும் என்பதை கணித்தே நெடுஞ்சாலைத் திட்டங்களு க்கு அருகே ம.பி., பாஜக முதல மைச்சர் மோகன் யாதவ் நிலத்தை வாங்கியும், குடும்பத்தினருக்கும் தாரை வார்த்துள்ளார்.

நில வாங்குதலும், குடும்பத்தினரின் நிறுவனங்களும்...

மோகன் யாதவிடம் 17 ஏக்கர் நில மும், அவரது மனைவி சீமா யாதவிடம் நேரடியாக 10.6 ஏக்கர் நிலமும் உள்ளது. சித்தி விநாயக் தேவ்கான் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சீமா யாதவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் 2024-2025 இல் 2.6 ஏக்கர் நிலத்தை வாங்கியது. மேலும், செப்டம்பர் 2024இல் தங்க ளுக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை மோகன் யாதவின் உறவினர் நீலேஷ் யாதவிடம் விற்றுள்ளது. மோகன் யாதவின் மருமகள் ஷாலினி யாதவ் (மகன் வைபவின் மனைவி), சகோதரர்கள் நந்தலால் மற்றும் நாராயண் யாதவ், நாரா யணின் மனைவி ரேகா, அவரது மகன் அபஹய் யாதவ் ஆகியோர் பெயர்களில் நிலங்கள் வாங்கப் பட்டுள்ளன. மோகன் யாதவின் மாமா மகன் களான கோவிந்த் (என்கிற பாப்லு யாதவ்), நீலேஷ் யாதவ் ஆகிய இருவருமே இந்த நிலக் குவிப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளின் முக்கிய சூத்திரதாரிகளாகச் செயல்பட்டுள்ளனர். கோவிந்த் யாதவ் தனது மகன்கள் சித்தார்த், ஆனந்த் மற்றும் சில தனியார் பங்குதாரர்களுடன் இணைந்து 2024 முதல் 46 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதில் கங்கேடி பகுதியில் வாங்கப்பட்ட 41 ஏக்கர் நிலத்தை, இந்தூரைச் சேர்ந்த ‘சாந்தி மஹாலோக் பில்டர்ஸ்’ நிறுவனத்திடம் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைத்துள்ளார். நீலேஷ் யாதவ், அவரது மனைவி சுனிதா ஆகியோர் ‘ஸ்ரீ அன்னா பூர்ணா கன்ஸ்ட்ரக்ஷன்’ மற்றும் ‘ஸ்ரீ அன்னாபூர்ணா எண்டர்பிரைசஸ்’ மூலம் 2024 முதல் 78 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் மத்தியப் பிரதேச ரேராவில் (RERA) நான்கு புதிய வீட்டுவசதித் திட்டங்களை பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலை யில், இதுகுறித்து முதலமைச்சர் மோகன் யாதவ் அல்லது அவரது அலுவலகம் எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.