சாலைகள், பாதாளச் சாக்கடை வசதிக் கோரி திருப்பூர் மிஷின் வீதியில் இயக்கம்
29 Dec 2025, 6:22 pm
<p><strong>சாலைகள், பாதாளச் சாக்கடை வசதிக் கோரி திருப்பூர் மிஷின் வீதியில் இயக்கம்</strong></p>
<p>திருப்பூர், டிச. 29 - திருப்பூர் மாநகராட்சி 45 ஆவது வார் டுக்குட்பட்ட பகுதிகளில் அடிப்ப டைப் பிரச்சனைகளை மாநகராட்சி நிர் வாகம் தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மிஷின் விதி கிளைகள் சார்பில் கூட்டு இயக்கம் நடைபெற் றது. திருப்பூர் ஈஸ்வரன் கோயில் அரு கில் மிஷின் வீதியில் ஞாயிறன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த இயக்கத் துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ஏ.செல்ல முத்து தலைமை வகித்தார். கோரிக்கை களை முன்வைத்து இந்த இயக்கத்தைத் தொடக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார் உரையாற்றினார். குறிப்பாக மிஷின் வீதி, அறிவொளி ரோடு சந்திக்கும் இணைப்பு சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்கவும், அகத்தியர் வீதி, மிஷின் வீதி சந்து, புரோக்கர் வீதி, மம்மூசா வீதிகளில் 4வது குடிநீர் திட்டத்திற்காகத் தோண் டப்பட்ட சிமெண்ட் கலவை சாலையைப் புதிதாக போடவும், மேற்படி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கவும், அறி வொளி ரோட்டில் தேங்கிக் கிடக்கும் குப் பைகளை அகற்றக் கோரியும், திருப் பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித் தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் வாழ்த்திப் பேசினார். வாலிபர் சங்கக் கிளைத் தலைவர் நாசர், கிளைச் செய லாளர் கார்த்திகேயன், கிளைப் பொரு ளாளர் ஹரிஹரன் மற்றும் அப்பகுதி பொது மக்கள் திரளாகக் கலந்து கொண் டனர். நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சி யின் டி.வி.சுகுமார் நன்றி கூறினார்.</p>
