இருப்பு பாதை மீது மரம் விழுந்தால் மலை ரயில் சேவை ரத்து
28 Jan 2026, 2:33 pm
<p><strong>இருப்பு பாதை மீது மரம் விழுந்தால் மலை ரயில் சேவை ரத்து</strong></p>
<p>மே.பாளையம், ஜன.28- மலைரயில் கடந்து செல் லும் அடர்லி-ஷில்குரோவ் ரயில் நிலையங்களுங்களுக்கு இடையே இருப்பு பாதை மீது ராட்சத மரம் விழுந்து கிடந்த தால், புதனன்று நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப் பட்டது. உலக பாரம்பரிய சின்ன மாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பய ணிகளையும் ஈர்க்கும் இம்மலை ரயில் செல் லும் அடர்லி-ஷில்குரோவ் ரயில் நிலையங் களுக்கு இடையே செவ்வாயன்று மாலை ஏற் பட்ட மண் சரிவால் அருகில் இருந்த ராட்சத மரமொன்று இருப்பு பாதை மீது விழுந்துள் ளது. கடந்த இரு தினங்களாக மேட்டுப் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்த தொடர் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு மரம் சரிந்திருக்கலாம் என்றும் மலைக்காடு என்பதால் இரவு நேரத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த இயலாது என்பதால் சீரமைப்பு பணிக்கு வசதிக்காக புதனன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் நீலகிரி மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.</p>
