மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி
22 May 2026, 1:43 am
<p><strong>மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 21 - கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாண வர்கள் 100-சதவீதம் தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலை ப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி யில் பயின்ற 340 மாணவர் கள் தேர்வில் 100-சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத் துள்ளனர். இதில் மாணவி கவிதாஞ்சலி 500-க்கு 496.மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார் இவர் பாட வரிசையாக பெற்ற விபரம் தமிழ் 99,ஆங்கிலம்-99, கணிதம் 100,அறிவியல் 100,சமூக அறிவியல் 98,ஆக. மொத்தம் 496.மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மேலும் 2-இடம் இரண்டு மாணவிகள் பிடித்துள்ளனர் மாணவி வனிதா தமிழ் 98,ஆங்கிலம் 99 கணிதம் 99,அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மொத்தம் 495 மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல் மாணவி வனிஷா தமிழ் 98, ஆங்கிலம் 99,கணிதம் 99, அறிவியல் 100,சமூக அறிவியல் 99ஆக மொத்தம் 495 மதிப்பெண் பெற்றுள்ளார் இப்பள்ளியில் மூன்றாமிடம் இரண்டு பேர் மாணவ அருண்பிரசாத் தமிழ் 99, ஆங்கிலம் 98,கணிதம் 100, அறிவியல் 99,சமூக அறிவியல் 98,ஆக.மொத்தம் 494-மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.மேலும் மாணவி குயின் ஒவியா, தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 98 ,அறிவியல் 100,சமூக அறிவியல் 99.ஆக மொத்தம் மதிப்பெண் 494.பெற்றுள்ளார். இப்பள்ளியில் மாணவர் கள் கணிதம் பாடத்தில் 13 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து இப்பள்ளி மாண வர்கள் சாதனை படைத்துள் ளனர் மேலும் அறிவியல் பாடத்தில் 34 பேர் 100க்கு 100-மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.இப்பள்ளி பயின்ற மாணவர்கள் 47 பேர் சென்டம் எடுத்து மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள் இப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் இதனையடுத்து இப்பள்ளியில் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவ ,மாணவிகளுக்கு மவுண்ட் பார்க் பள்ளியின் தாளாளர் மணிமாறன் பாராட்டி ரொக்க பரிசுகள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார் பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமார், வகுப்பு ஆசிரியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.</p>
