கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
25 Jan 2026, 6:29 pm
<p><strong>கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி</strong></p>
<p>சேலம், ஜன.25- ஏற்காடு மற்றும் நீலகிரி யில் நிலவும் கடும் பனிமூட் டத்தால், வாகன ஓட்டிகள் பக லிலேயே முகப்பு விளக்கு களை எரியவிட்டவாறு மெது வாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். சேலம் மாவட்டத்தி லுள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் காரண மாக குளிரின் தாக்கம் அதிகமாக இருக் கிறது. இதனால், ஏற்காடு வந்துள்ள சுற்று லாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் குளித்தாங்கும் உடைகள் அணிந்து வருகின்ற னர். இந்நிலையில், ஞாயிறன்று காலை ஏற் காட்டில் நிலவிய அடர் பனிமூட்டம் மற்றும் சாரல் மழையால் ஏற்காடு வந்துள்ள சுற்று லாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த னர். விடுமுறை தினம் என்பதால் அதிகாலை யிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்தனர். இவர்கள் அங்கு நிலவி வரும் பனிமூட்டத்தின் மத்தியில் நடந்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்த னர். பனிமூட்டம் அடர்த்தியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு மிகுந்த சிரமமடைந்த னர். இரண்டு அடி தூரத்தில் உள்ளவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலை வருவதால் வாகனங்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டவாறு சென்றனர். கோத்தகிரி, குன்னூரில்., நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம் மழை பெய்யும் என அறிவித்த நிலை யில், ஞாயிறன்று சாரல் மழை பெய்தது. குறிப்பாக கோத்தகிரி குன்னூர் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் சாரல் மழையுடன், எதிரே வரு பவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி களில் கடும் குளிரும் நிலவுகிறது. வாகன ஓட்டி கள் பகலிலேயே சாலைகள் சரியாக தெரியா ததால் வாகனங்களில் முகப்பு விளக்கு களை எரியவிட்டவரே மெதுவாக சாலை களில் வாகனங்களை இயக்கி வருகின்ற னர்.</p>
