முந்தய பக்கம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்!

4 Dec 2025, 3:52 pm
போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்!
<p><strong>போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்!</strong></p> <p>தருமபுரி, டிச.4- பாலக்கோடு பகுதி யில் ஏற்படும் போக்குவ ரத்து நெரிசலை சரி செய்ய, கூடுதல் போக்கு வரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என &nbsp;வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நாள்தோறும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூரு, சென்னை, தருமபுரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப் பட்டு வருகின்றன. மேலும், 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி &nbsp;வருவதால், பாலக்கோடு பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். &nbsp;இந்நிலையில், நகரிலுள்ள வணிக கடைகளின் முன்பு சாலையை ஆக் கிரமித்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், சாலை யில் வாகனங்கள் செல்ல வழியில்லாமால் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாக னங்கள் பல மணி நேரம் காத்திருந்து ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் &nbsp;ஏற்பட்டு வருகிறது. மேலும், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை வரும் போது மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து சீரடைய பல மணி &nbsp;நேரமாகிறது. அவசர ஊர்திகள் விரைந்து செல்ல முடியாமல் பெரும் &nbsp;சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவ ரத்து காவலர்கள் இல்லாததால், தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவ டிக்கை மேற்கொண்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்கு வரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram