திடீரென விழுந்த ரயில்வே கேட் அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்
26 Nov 2025, 4:29 pm
<p><strong>திடீரென விழுந்த ரயில்வே கேட் அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்</strong></p>
<p>கோவை, நவ.26- துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில் திடீரென ரயில்வே கேட் கீழே சரிந்து விழுந்த தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், துடியலூரில் இருந்து சரவணம்பட்டி நோக்கி இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட ஏராள மான வாகனங்கள் செவ்வாயன்று இரவு கிராசிங்கைக் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கேட் இயந்திரம் கோளாறு அடைந்ததால், கேட் வேகமாக கீழே இறங்கி வந்தது. வாகன ஓட்டிகள் பதறி ஓடியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. சில இருசக்கர வாகனங்கள் கேட்டில் சிக்கி சேதமடைந்தன. ஆனால், யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பாது காப்புப் படையினரும், கேட் மேனும் உடனடியாக விரைந்து வந்து கேட்டை மீண்டும் உயர்த்தி, போக்குவரத்தை சீரமைத்த னர். ரயில்வே அதிகாரிகள் விசாரணையில், “கேட் இயக்கும் இயந்திரத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்க லாம். எச்சரிக்கை மணியும் ஒலிக்கவில்லை. இதுகுறித்து பொறியியல் பிரிவினர் முழு ஆய்வு நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தனர். இப்பகுதியில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், “மேம்பாலம் அமைக்க வேண் டும் அல்லது கேட் இயந்திரத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்” என உள்ளூர் மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக் கை விடுத்து வருகின்றனர்.</p>
