கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மோட்டார் வாகனச் சட்டம்
27 Sept 2026, 11:45 pm

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மோட்டார் வாகனச் சட்டம்

சாலை போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

கோவை, செப்.27-கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும் என சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை மாவட்ட சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) 7 ஆவது ஆண்டு மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிறன்று கணபதியில் உள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் கொடியை ஏ.நாராயணன் ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் சி.ஹரி நாராயணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பொறுப்பு செயலாளர் ஆர்.மகேந்திரன், பொருளாளர் கே.பாலுசாமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.கனகராஜ், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, துணைத்தலைவர் கே.ரத்தினகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இக்கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலமாக நடைபெறும் கொள்ளையை தடுக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டண உயர்வைஉடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளும் மற்றும் காவல் துறையும் ஆன்லைன் அபராதம் என்பதை கைவிட வேண்டும். விபத்து நேரத்தில் 10 ஆண்டுகள் சிறை, ரூ.7 லட்சம் அபராதம் என்ற கொடுமையான சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் மிகவும் கொடூரமான பி.என்.எஸ். சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும். தனியார் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அக்.1,2 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.ரபீக், செயலாளராக ஆர்.மகேந்திரன், பொருளாளராக கே.ராஜசேகரன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சம்மேளன மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்ட துணைத்தலைவர் பி.வேன்ரபிக் நன்றி கூறினார்.