மோட்டார் வாகன தொழிலாளர் சங்க தோழர் பா.அன்பழகன் காலமானார்
25 May 2026, 1:36 am

மோட்டார் வாகன தொழிலாளர் சங்க தோழர் பா.அன்பழகன் காலமானார்

சென்னை, மே 24 - சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் ஸ்தாபக பொது ச்செயலாளர் தோழர் பா.அன்பழகன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமையன்று (ஏப். 23) சேலத்தில் காலமானார். அவருக்கு வயது 78. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணி யாற்றிய பா.அன்பழகன், அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி, ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் தலைவர், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழி லாளர் சங்கத்தின் ஸ்தாபக பொதுச் செயலா ளர், சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார். சேலம் சுரமங்களத்தில் உள்ள அவரது மகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ். பாலசுப்பிர மணியம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பா. பாலகிருஷ்ணன், சிஐடியு சேலம் மாவட்டச் செயலாளர் கோவிந்தன், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கண்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது தகனம் அடக்கம் செய்யப்பட்டது. இரங்கல் தோழர் பா.அன்பழகன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல் முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.