மோட்டார் வாகன எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்திடுக
9 Dec 2025, 4:25 pm
<p><strong>மோட்டார் வாகன எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்திடுக</strong></p>
<p>நாமக்கல், டிச.9- மோட்டார் வாகன எப்.சி. கட்ட ணம் பலமடங்கு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மோட்டார் இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் வட் டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் இருசக்கர வாக னம் முதல் கனரக வாகனம் வரை அனைத்திற்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் (எப்சி) கட்டணத்தை கடந்த 11 ஆம் தேதி முதல் பல மடங்கு உயர்த்தியது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்த எப்.சி கட்டண உயர்வை கடந்த 17 ஆம் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி யுள்ளது. அழிந்து வரும் போக்குவ ரத்து தொழிலைப் பாதுகாத்திடவும், பல லட்சக்கணக்கான லாரி உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள், கோடிக் கணக்கான டூ வீலர், எல்சிவி, வேன் கள் உள்ளிட்ட வாகன உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாத்திட ஒன்றிய அரசு அறிவித்துள்ள எப்.சி சான்றி தழ் கட்டண உயர்வை தமிழகத்தில் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட் டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சிஐடியு மோட்டார் இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சங்க மாவட்டத் தலைவர் எம். ஆனந்தன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ் முன்னிலை வகித்தார். சம்மேளன மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், மாநில துணைச் செய லாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ந. வேலுசாமி, தலைவர் எம்.அசோகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மோகன், எஸ்.கந்தசாமி, துணைத் தலைவர் டி.ஆனந்தராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தங்க வேல், மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மூர்த்தி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
