முந்தய பக்கம்

அன்னையர் தின கொண்டாட்டம்

13 May 2026, 2:34 am
அன்னையர் தின கொண்டாட்டம்
<p><strong>அன்னையர் தின கொண்டாட்டம்</strong></p><p>சென்னை, மே 12- சென்னையில் பர்த்ரைட் பை ரெயின்போ மருத்துவமனை சார்பில் அன்னையர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மெரினா மால் மற்றும் அம்பா ஸ்கைஒன் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்றன. இசை, விளையாட்டுகள் மற்றும் புகைப்படக் கூடாரங்கள் எனத் தாய்மார்களும் குழந்தைகளும் உற்சாக மாகப் பொழுதைக் கழித்த னர். தாய்மை என்பது வெறும் மருத்துவ நிகழ்வு மட்டுமல்ல, அது குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் ஒரு கூட்டு அனுபவம் என்பதை இந்நிகழ்வு பறைசாற்றியது. சோழிங்கநல்லூர் மற்றும் அண்ணா நகர் பகுதி மக்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர். சிறந்த மருத்துவச் சேவையுடன், குடும்பங்க ளிடையே நெகிழ்ச்சியான உறவை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram